ZEE Tamil TV Serial Maari Today Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி சீரியல்: இன்றைய எபிசோட் அப்டேட்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் முதல் மரியாதைக்காக தாரா சதி வேலைகளை செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | Actor Sivakumar: ‘மீண்டும் மீண்டுமா..’ ரசிகர் கொடுத்த பொன்னாடையை தூக்கியெறிந்த சிவகுமார்..வைரல் வீடியோ!


அதாவது, தாராவுக்கு முதல் மரியாதை செய்ய போகும் சமயத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் சாமுண்டீஷவரி, நானும் இந்த ஊரை சேர்ந்தவள் தான், மாரிக்கு தான் முதல் மரியாதையை கொடுக்கணும் என்று சொல்ல தாரா பதில் பேச முடியாமல் நிற்கிறாள். நீங்க சொன்ன சரி தான் அக்கா என்று சொல்ல மாரிக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. 


இதையெல்லாம் பார்த்து தாரா பயங்கர கடுப்பாகிறாள், கோவில் திருவிழாவில் எதையாவது சதி செய்து கெடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்ட தொடங்குகிறாள், பிறகு கோவிலில் பந்தக்கால் நடப்படுகிறது. அது முடிந்ததும் மாரியும் சூரியாவும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். 


மாரி தேவி போட்டோ முன்பு நின்று ஊர் மக்கள் எனக்கு அவ்வளவு அன்பை கொடுக்கறாங்க, முதல் மரியாதை தராங்க. இதுக்கெல்லாம் காரணம் நீங்க மட்டும் தான் என்று சொல்லி சந்தோசப்படுகிறாள். மறுபக்கம் தாரா அடுத்தகட்ட சூழ்ச்சிகளை செய்ய தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Actor Prabhas: லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ