சூர்யா பிளானால் நடந்த ட்விஸ்ட் - மாரி சீரியல் அப்டேட்!
Maari TV Serial Online: நேற்றைய எபிசோடில் தண்ணீர் எடுக்க கீழே வந்த மரியா ஏதோ உருவம் தென்பட்டதை பார்த்து பயந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Maari TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லாரும் மரியாவின் பேச்சை கேட்டு ஓடி வந்து பார்க்க அங்கு யாரும் இல்லாமல் இருக்க மரியா அதிர்ச்சி அடைகிறாள். தாரா மரியாவை கூப்பிட்டு, 'உனக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க' என்று கேட்க 'இல்ல சூர்யா அங்க தூக்குல தொங்கிட்டு இருந்தான்' என்று சொல்ல, 'சொத்து நம்ம கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இரு' என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். தண்ணீர் எடுக்க கீழே வந்த மரியா ஏதோ உருவம் தென்பட்டதை பார்த்து பயந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மரியா எல்லாரையும் கூப்பிட அங்கு எதுவும் இல்லை என்று ரூமுக்கு சென்ற பிறகு இரண்டு பேயாக தெரிய மரியா இன்னும் பயப்படுகிறாள். சூரியாவும் ஹாசினியும் சேர்ந்து பேய் கெட்டப்பில் மரியாவை போட்டு அடித்து துவைக்கின்றனர். இதனையடுத்து எல்லாரும் மரியாவுக்கு காத்து கருப்பு எதாவது பிடித்து இருக்கலாம் என்று பேச தொடங்க தாராவும் சங்கரபாண்டியும் அவளை மந்திரவாதியிடம் அழைத்து வருகின்றனர்.அந்த மந்திரவாதியும் ரத்த காட்டேரி பிடிச்சிருக்கு என்று சொல்லி சாட்டையால் போட்டு அடி வெளுக்கிறார்.
திரும்ப வருவியா? இந்த உடம்பை விட்டு போய்ட்டு என்று மிரட்ட வலி தாங்க முடியாமல் மரியாவும் போய்டுறேன் என்று சொல்கிறாள். பிறகு மந்திரவாதி திரும்பவும் அந்த ஆவி வராது, அப்படியே திரும்ப வந்தா கூட்டிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ