மாரியால் பூஜைக்கு வராத தேவி அம்மா - மாரி சீரியல் அப்டேட்!
Maari Zee Tamil mega serial update: மாரியால் பூஜைக்கு வராத தேவி அம்மா.. தாரா கொடுத்த அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாரி தேவி அம்மா உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்திய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வீட்டில் பூஜை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்க சங்கர பாண்டி சாமியார் எப்படியும் தேவியம்மாவை அந்த பாட்டிலுக்குள் அடைத்து வைத்து விடுவார் என்று பேச தாராவும் ஸ்ரீஜாவும் கொஞ்சம் வாயை மூடிட்டு இரு, இல்லனா மாரி உஷாராகி விடுவாள் என திட்டுகின்றனர். மறுபக்கம் தேவி அம்மா ஒவ்வொரு முறையும் வீட்டுக்குள் வர முயற்சி செய்ய நெருப்பு வளையம் எரிந்து அவரை வரவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. இந்த நேரத்தில் ராசாத்தி சமயபுரத்து மாரியம்மன் மஞ்சளை கலந்து பூஜை நடக்கும் இடத்தில் வைக்க சொன்ன விஷயம் மாரிக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ஜெயா மாஸ்டருக்கு ஷாக், மகாவுக்கு செக்.. எதிர்பாராத ட்விஸ்ட்
உடனே மாரி மஞ்சளை கலந்து கொண்டு வந்து வைக்க இதை பார்த்துவிடும் சாமியார் என்னது இது என்று கேட்டு இதையெல்லாம் இங்கு வைக்க கூடாது, அப்படி வச்சா ஆத்மா வராது என சொல்லி எடுக்க சொல்கிறார். மாரி பூஜை செய்த தீர்த்தம் தான் என எவ்வளவு சொல்லியும் சாமியார் அதை எடுத்தே தீர வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்ல வேறு வழியில்லாமல் எடுத்துச் சென்று விடுகிறாள். பிறகு மாரி ரூமுக்குள் அமர்ந்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க மீண்டும் அங்கு தோன்றும் ராசாத்தி நீ அம்மனை மட்டும் வேண்டு கண்டிப்பாக அவங்க தேவியம்மா ஆத்மாவை உள்ள வர விட மாட்டாங்க என்று சொல்லிவிட்டு மறைய மாரி மீண்டும் பூஜை நடக்கும் இடத்திற்கு வருகிறாள்.
இங்கே எவ்வளவு பூஜை செய்தும் தேவியின் ஆத்மா வராததால் சாமியார் பூஜையை முடித்து விட்டு ஏதோ தப்பு நடந்து இருக்கு ஆத்மா வரவில்லை என சொல்ல தாரா மாரியை பார்த்து ஏன் தேவி அம்மா ஆத்மா வரவில்லை என கேள்வி எழுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ