மெட்ராஸ் தினம்: இன்று 384வது மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல படங்களும் அதில் இடம் பெற்றுள்ள பாடல்களும் சென்னையை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவை என்னென்ன படங்கள் மற்றும் பாடல்களை என்பதையும், மக்களின் மனங்களில் எந்த வகையான இடத்தை பிடித்துள்ளது என்பதையும் பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்..” மே மாதம்:


வினீத் ஹீரோவாக நடித்திருந்த படம், மே மாதம். அப்பாவிடமிருந்து தப்பி ஓடி வரும் ஒரு பெண் இன்னொருவனிடம் அடைக்கலமாகும் போது அவனுடன் சேர்ந்து சென்னையை சுற்றி பார்க்கிறாள். அப்போது அவள் குஷியில் பாடும் பாடல்தான், “மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்..” இந்த பாடலில் வரும் வரிகளும் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தளங்களை குறிப்பிடும் வகையில் இடம் பெற்றிருக்கும். வெளியூர்களில் இருந்து சென்னையை சுற்றி பார்க்க வரவோரின் ப்ளே லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் பாடல் இது. 


மேலும் படிக்க | ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள்…! யார் யார் தெரியுமா..?


“சென்னை பட்டணம்..”-அள்ளித்தந்த வானம்:


பிரபுதேவா, முரளி, லைலா உள்ளிட்டோரின் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், அள்ளித்தந்த வானம். பிரபல நடிகை கல்யாணி, இந்த படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்திருப்பார். பிரபுதேவாவுடன் சென்னையை சுற்றி பார்க்கையில் வரும் பாடல்தான், “சென்னை பட்டணம்..” இந்த பாடலில், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களை காண்பித்திருப்பர். 



“வாம்மா துரையம்மா..”-மதராசப்பட்டினம்:


2010ஆம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், “வாம்மா துரையம்மா…” இந்த படத்தில், பிரிடிஷ் அரசாங்கத்தின் ஆட்சிக்கு கீழ் இந்தியா இருந்த போது மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை காட்சிப்படுத்தியிருப்பர். வாம்மா துரையம்மா பாடலில், முதன்முறையாக மதராசப்பட்டினத்திற்கு வந்த ஒரு பெண்ணிற்கு ஊரை சுற்றி காண்பிக்கும் உள்ளூர் வாசி, தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள அருமை பெறுமைகளை பேசி பாடுவது போல இப்பாடல் எழுதப்பெற்றிருக்கும். பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருப்பார், ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பார். 


“சான்ஸே இல்ல..”-ஆல்பம்:


தமிழ் சினிமாவின் ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் அனிருத். இவர், சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆல்பம் பாடல்களை பாடி வந்தார். அப்படி அவர் சென்னைக்காக பாடிய பாடல்தான், “சான்ஸே இல்ல..” இந்த பாடலில் சென்னையில் உள்ள பிரபலமான இடங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்காது. சென்னை மக்கள், சென்னையினால் என்னென்ன பயன் என்பதும் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும். இன்று சென்னை தினம் என்பதால் பலர் இப்பாடலை தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸாக வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு இருக்கின்றனர். 


“சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்..”-வணக்கம் சென்னை:


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம், வணக்கம் சென்னை. படத்தின் டைட்டிலிலேயே தெரிந்திருக்கும், இது எதைப்பற்றிய படம் என்று. இதில் படத்தின் போஸ்ட் கிரெடிட்ஸிற்காக எழுதப்பட்ட பாடல், சென்னை சிட்டி கேங்ஸ்டர். 


“நட்புக்கு பிரச்சன நா வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நமளுக்கு பிரச்சன யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்


இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா சென்னை டா..”


இந்த வரிகளை தொண்டை கிழிய பாடுவோர் பலர் உள்ளனர். இதுவும் அனிருத் இசையில் உருவான பாடல்தான். 


“எங்க ஊரு Madras-u இதுக்கு நாங்க தானே address-u..”


பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். வட சென்னையின் அழகையும் அதன் வளமையையும் படத்தின் ஆரம்பத்திலேயே “எங்க ஊரு Madras-u” பாடலில் காண்பித்திருப்பர். சென்னைக்கே உரிய காணா பாடல் வடிவில் பல பாடல்கள் வெளிவந்திருந்தாலும் இந்த பாடல் சென்னை வாசிகளுடன் ரத்தம்-சதையுடன் கலந்து ஒன்று. 


மேலும் படிக்க | Madras Day 2023: சென்னையின் அடையாளமாக கருதப்படும் 5 இடங்கள்-மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ