எதிர்பார்ப்பை தூண்டிய 2.0 3டி மேக்கிங் வீடியோ: பார்க்க!
இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.0 படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். எமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க லேட்டஸ்ட் 3 டி கேமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் யு ட்யூபில் வெளியிடப்பட்டது.
3 நிமிடம் 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், 2.0 ஏன் 3டியில் எடுத்தார்கள், அதில் இருந்த சவால்கள் குறித்து ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார், ஒளிப்பதிவாளர் ஆகியோர் பேசி உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ 3டி வடிவில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இனைய தளத்தில் மிகவும் வைராலாகி உள்ளது.
முன்னதாக ‘2.0’ படம் உருவாகும் வீதம் குறித்த மேக்கிங் வீடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
வீடியோ பார்க்க:-