Kazan Khan: பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்..! தென்னிந்திய திரையுலகை துரத்தும் சோகம்...
Kazan Khan Death: மலையாள வில்லன் நடிகர் கசான் கான், மாரடைப்பாள் உயிரிழந்துள்ளார். இதனால், ரசிகர்களும் திரையுலகினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மலையாள சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர், கசான் கான். தமிழிலும் விஜய், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் வெளியான தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லனாக நடித்து வந்தார். இவர், தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
திடீர் மரணம்:
வில்லன் நடிகர் கசான் கான், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளார என்.எம் பாதுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த செய்தியை கேட்டவுடன் இவரது ரசிகர்களும், இவருடன் பல படங்களில் சேர்ந்து நடித்த திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம்:
இன்று, மிகப்பெரிய வில்லன் நடிகராக பலரால் அறியப்படும் கசான் கான் 1992ஆம் ஆண்டு வெளியான செந்தமிழ் பாட்டு என்ற படம் மூலமாகத்தான் திரையுலகிற்குள் நுழைந்தார். பின்பு கோலிவுட் திரையுலகில் விஜய், சரத்குமார், சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்தார். விஜயகாந்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் போன்றோருக்கு வில்லனாகவும் கசான் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | Tamanna: பளிங்கு போல் பளபளவென மினுக்கும் ஜெயிலர் பட நாயகி தமன்னா..!
பிரபலமான படங்கள்:
தமிழ், மலையாளம் மட்டுமன்றி சில கன்னட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் கசான் கான். கிராமத்து கதையாகட்டும், த்ரில்லர் கதையாகட்டும், எதை கொடுத்தாலும் அசால்டாக நடிக்கும் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் இவர். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சி.ஐ.டி மூசா, மேட்டுக்குடி, தி டான் போன்ற படங்கள் செம ஹிட் அடித்தன. தமிழில் நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளத்தை அள்ளித்தா, முறை மாமன், சீனா தானா, கருப்பு நிலா, என் ஆசை மச்சான் போன்ற படங்கள் மக்களின் ஃபேவரட் படங்கள் லிஸ்டில் இன்றளவும் இடம் பெற்றுள்ளன.
கேரளா பூர்வீகம்:
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்த இவர் அதிகமாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில்தான் கோலோச்சியுள்ளார். இவரது மறைவிற்கு கன்னட நடிகர் சுதீப் உள்பட பலர் இரங்கள் தெரிவித்துள்ளனர். இவர் உடலுக்கு இறுதி மறியாதை எப்போது என்ற செய்தி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் மட்டும் இத்தனை உயிரிழப்புகள்:
இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர்கள் பலர், கடந்த சில வருடங்களில் வரிசையாக உயிரிழந்து வருகின்றனர். தமிழ் நடிகர் மயில்சாமி, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் உயிரிழந்தார். காமெடி நடிகர் மனோபாலா, கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்தார். இந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் பிரபல நடிகராக இருந்த மங்கள் தில்லான் புற்று நோய் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். நேற்று, வில்லன் நடிகர் கசான் கார் இறந்துள்ளார். இப்படி ஒரு வருடத்திற்குள்ளாகவே இத்தனை பேர் உயிரிழந்துள்ள செய்து, இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மேலும் படிக்க | AR Rahman: இசையமைப்பாளர் ஆகிறார் இசைப்புயலின் அன்பு மகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ