மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?



இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.  'சீயான்' விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


சித்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் இது ஆகும்.  சித்தார்த், சஹஸ்ரா ஸ்ரீ, நிமிஷா சஜயன் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் பட்டியலில் சித்தாவும் ஒன்று.  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது படம் ஒளிபரப்பாகிறது.  குழந்தைகளை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஒருவரை தேடி பிடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. இந்தப் படம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆழமாக பேசி இருந்தது.  மேலும் பெண் கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்பட்டு இருந்தது.  இவை சித்தா படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.


சித்தா படம் வெளியான அடுத்த சில மாதங்களில் சியான் 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் அறிமுக வீடியோவில் சியான் விக்ரம் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  போலீஸ் ஸ்டேஷன்ஸில் நடைபெறும் விதத்தில் அமைத்திருந்த அந்த 5 நிமிட காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே அதிகப்படுத்தியது.  தற்போது படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றிய அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


மேலும் படிக்க | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ