தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி!

Tamil Film Active Producers Association: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை வெளியிட்டார் இயக்குந‌ர் பாரதிராஜா.  

Written by - RK Spark | Last Updated : Mar 2, 2024, 10:01 AM IST
  • தமிழ் சினிமா வர்த்தக கையேடு.
  • மாதம் ஒரு இதழ் வெளியாகும்.
  • புரோக்கர்களை தவிர்க்க இது உதவும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி! title=

திரையுலகில் செயலாற்றி வரும் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் திரைப்படத்துறையின் நலனுக்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா வர்த்தக கையேடு எனும் தகவல் களஞ்சியத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.  சாட்டிலைட், டிஜிட்டல், பிற மொழி டப்பிங், வெளிநாட்டு மற்றும் இந்திய திரையரங்கு உரிமைகளை வாங்குவோர்களை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எளிதில் சென்றடையும் நோக்கில் இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டின் மூலம் தமிழ் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை எளிதாக பரப்புவதோடு, தயாரிப்பு செலவுகளை குறைக்க முடியும். 

மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?

வெளிப்புற யூனிட் செலவுகள், பல்வேறு நகரங்களில்/வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு கிடைக்கும் மானியம், பிற மொழிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த கையேட்டில் இருப்பதால், தயாரிப்பு செலவைக் குறைக்க இது உதவுவதுடன். தயாரிப்பாளர்களின் விழிப்புணர்வுக்காக‌ தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வரவிருக்கும் படங்களின் வெளியீட்டு அட்டவணை, தொழில்துறை தகவல்கள், வெற்றிகரமான திரைப்படங்கள் குறித்த‌ ஆய்வுகள், பழம்பெரும் தயாரிப்பாளர்கள் குறித்த தற்போதைய தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை தாங்கி வருகிறது.

மொத்தத்தில், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை விற்க சரியான ந‌பவர்களை அணுகவும், திரைப்படங்களின் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் இக்கையேடு உதவும். மாதாந்திர இதழாக அச்சிலும் டிஜிட்டல் வடிவத்திலும் தமிழ் சினிமா வர்த்தக கையேடு வெளியிடப்படும்.  திரைப்படங்களின் உரிமை குறித்த தகவல்களை தெரிவிக்க, ‘பொது அறிவிப்பு’ விளம்பரங்களை வெளியிடவும் இது பயனுள்ளதாக இருக்கும்.  மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்கு விநியோகஸ்தர்கள், ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்குபவர்கள், பிற மொழி (தெலுங்கு) உரிமைகளை வாங்குபவர்கள், தென்னிந்திய‌ சாட்டிலைட் சேனல்கள், டிஜிட்டல்/OTT தளங்கள், வெளிநாட்டு உரிமைகளை வாங்குபவர்கள், ஆடியோ/இசை நிறுவனங்களுக்கு தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டி அனுப்பப்படும். திரைப்பட வணிக சேவைகளை வழங்கும் ஸ்டூடியோக்கள், வெளிப்புற யூனிட்டுகள், டிஐ, வி எஃப் எக்ஸ், டி ஐ டி, க்யூப்/டிஜிட்டல் சேவை, போஸ்ட்‍ புரொடக்ஷன் நிறுவனங்களுக்கும் பிரதிகள் அனுப்பப்படும்.

அதிகாரப்பூர்வ தொழில்துறை சங்கத்திலிருந்து வெளிவரும் பிராந்திய சினிமாவின் முதல் வர்த்தக வழிகாட்டியாக இது இருக்கும். சங்கதிற்கு சொந்தமான இந்தக் கையேடு எந்த தனி நபருக்கும் உரிமையானதல்ல. உறுப்பினரகளுக்கும் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்களுக்கும் இலவசமாக இது வழங்கப்படும்.  வர்த்தக வழிகாட்டியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆலோசனையையும்/கருத்தையும் வரவேற்கிறோம். உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை tfapa2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதவும்.  தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டியை சங்கத்தின் தலைவர் ‘இயக்குந‌ர் இமயம்’ திரு பாரதிராஜா பல முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும் படிக்க | Vanangaan: பாலா சார் அப்படி எடுவுமே செய்யவில்லை.. நடிகை மமிதா பைஜூ விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News