தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி நடிகையாக இருந்தவர், பாவனா. தமிழில் அஜித், ஜெயம்ரவி ஆகிய பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16 வயதில் சினிமா..


பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா மேனன். இவர், கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் 1986ஆம் ஆண்டு பிறந்தார். பதினாேராம் வகுப்பு படிக்கும் போது, தனது 16 வயதில் திரையுலகிற்குள் நுழைந்தார், பாவனா. “நம்மால்” என பெயரிடப்பட்டிருந்த அந்த திரைப்படம் மக்கிளடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதையடுத்து பாவனாவிற்கு அடுத்தடுத்த சினிமா கதவுகள் திறக்கப்பட்டன. பாவனா, பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இதுவரை 80ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார்.


இவர், 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” எனும் படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தென்திரையுலகில் சிறகை விரித்து பறக்க தொடங்கினார், பாவனா. கன்னடத் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் அம்மொழியில் நடித்திருந்த ஜாக்கி என்ற படம் ஹிட் அடிக்க, பல இயக்குநர்கள் இவரது கால்ஷீட் வேண்டி காத்துக்கிடக்க தொடங்கினர். 


மேலும் படிக்க | நெஞ்சு வலியில் துடிக்கும் ஜெகதீஷ் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!


மிஷ்கினின் முதல் கதாநாயாகி..


தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வரும், மிஷ்கின் இயக்கியிருந்த படம் ‘சித்திரம் பேசுதடி’. இவரது முதல் படம் ‘நந்தலாலா’ என்றாலும் அதில் கதாநாயகி என குறிப்பிடும் அளவிற்கு யாரும் இல்லை. சித்திரம் பேசுதடி படத்தில் நரேனிற்கு ஜோடியாக நடித்திருந்தார், பாவனா. இதில், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பினை பெற்றார். தொடர்ந்து இவருக்கு வெயில், தீபாவளி, ஆர்யா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து 2007-2008 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். எந்த காரணத்தினாலோ அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெறாமல் பாேனது. இதையடுத்து அப்படியே தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகின் பக்கம் சென்றுவிட்டார்.  


பாலியல் வன்கொடுமை…


சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்ததாக கூறி திரையுலகில் பரபரப்பை உண்டாக்கினார், பாவனா. அவர் கலந்து கொண்டிருக்கும் நேர்காணல்களில் அவர், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் மனம் உடைந்து போனதாகவும், மீண்டும் தன் மானத்தை பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்தனர். ஒரு சிலரோ, இவருக்கும் நடிகர் திலீப்பிற்கும் இடையே இருந்த பிரச்சனையினால்தான் இவ்வாறான சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவித்தனர். 


86ஆவது படம்:


தனக்கு நடந்த கொடுமையில் இருந்து மீள, நேரம் எடுத்துக்கொண்ட பாவனா இடையிடையே படங்களிலும் நடித்துவந்தார். தற்போது, பாவானாவின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. “தி டோர்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம், பேய்-திகில் படமாக உருவாகியுள்ளது.  இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ‘ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட்’ கேலிக்குள்ளான படக்குழுவின் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ