‘ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட்’ கேலிக்குள்ளான படக்குழுவின் அறிவிப்பு!

பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம், புராண கதையான இராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த படம் ரிலீஸாகும் ஒவ்வொரு திரையரங்களிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2023, 11:02 AM IST
  • ஆதிபுருஷ் படம், வரும் 16ஆம் தேதி வெளியாகிறது.
  • படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதனை ரசிகர்கள் இணையத்தில் கேலி செய்து வருகின்றனர்.
‘ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு சீட்’ கேலிக்குள்ளான படக்குழுவின் அறிவிப்பு! title=

இராமன்-சீதையின் கதையான இராமாயணத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ஆதிபுருஷ். இதில் இராமனாக ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸும், சீதையாக பாலிவுட் நடிகை க்ருத்தி சனோனும் நடிக்கின்றனர். இராவணனாக சயிஃப் அலி கான் நடித்திருக்கிறார். இந்த படம், வரும் 16ஆம் வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அனுமனுக்கென்று ஒரு இருக்கை..

இராமனின் பரம பக்தன், அனுமன் என்பது அனைவரும் அறிந்த கதை. எங்கெல்லாம் இராமனின் பெயரை ஒருவர் குறிப்பிடுகிறாரோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்றும் சிலரால் நம்பப்படுகிறது. இதையடுத்து, விரைவில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் திரைப்படமும் இராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த படத்தில் அனுமனுக்கும் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளார்.

மேலும், ஆதிபுருஷ் படம் ரிலீஸ் ஆகும் போது கண்டிப்பாக அனுமன் அந்த படத்தை பார்ப்பார் என படக்குழுவினரால் நம்பப்படுகிறது. இதனால், இப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை வெளியாகியுள்ள இந்திய படங்களிலில் இப்படி வித்தியாசமாக கடவுளுக்கென்று ஒரு இருக்கையை ஒதுக்குவது இதுவே முதன் முறை. இராம பக்தர்களின் நம்பிக்கையை பறைசாற்றும் வகையில் இவ்வாறான புதுவித முயற்சியை படக்குழு மேற்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா?

நெட்டிசன்கள் சேட்டை….

இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் நாட்டு ரசிகர்கள் சிலர் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தர முன்வரவில்லை. மேலும், இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் கேலி செய்து வந்தனர். இந்த நிலையில், ஆதிபுருஷ் படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் அனுமனுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தததும் அதை மீம்ஸாக மாற்ற ஆரம்பித்தனர். ஒரு சிலர், “அனுமனை நன்றாக படுத்துக்கொண்டே படம் பார்க்க சொல்லுங்கள் ஏனென்றால் பாதி திரையரங்கு காலியாகத்தான் இருக்க போகிறது” என கேலி செய்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்களோ, “உண்மையான இராமாயணம் நிகழ்ந்த போது அனுமன் அதை நேரிலேயே பார்த்திருபாரே..இதை ஏன் அவர் படமாக வேறு பார்க்க வரப்போகிறார்?” என சிலர் ரசிகர்கல் உண்மையாகவே குழம்பு போயுள்ளனர். 

மொக்கையான வி.எஃப்.எக்ஸ்

ஆதி புருஷ் திரைப்படம் முன்னரே சில வாரங்களுக்கு முன்னரே வெளியாக இருந்தது. இந்த படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகளும் சில அனிமேஷன் காட்சிகளும் மிகவும் மோசமாக வடிவைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, படக்குழு இந்த காட்சிகளை மீண்டும் வடிவமைத்து வெளியிடுவதற்கு நாட்களாகி விட்டது. முன்னர் அமைக்கப்பட்டிருந்த வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மீண்டும் ரீ-எடிட் செய்யப்பட்டதால் படத்தின் பட்ஜெட் 600 கோடியை தாண்டி விட்டதாக கூட சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு..

ஆதிபுருஷ் படத்திற்கு தென்னிந்திய அளவில் பெரிதாக வரவேற்பு இல்லை. ஆனால் படத்தின் ப்ரமோஷன்களையும் பிரம்மாண்டத்தையும் பார்த்த ஒரு சிலர் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்திலிருந்து வெளியாகியிருந்த ‘ராம் சீதா ராம்’ என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பிரபாஸிற்கு தொடர் தாேல்வி…

பாகுபலி பட புகழ் பிரபாஸ், சமீபகாலமாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாமே பெரிய பட்ஜட் படங்கள். 2019ஆம் அண்டு பான் இந்தியா அளவில் வெளியான ‘சஹோ’ திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் தாறுமாறாக சறுக்கியது. அடுத்து வெளியான ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் ரசிகர்களை ஏமாற்றினார் பிரபாஸ். ஆதிபுருஷ் படத்தையடுத்து, இவரது ‘சலார்’ படமும் வெளியாகிறது. இதுவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம்தான். அடுத்த வருடம் வெளியாகவுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படமும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பிரபாஸிற்கு சில ஆண்டுகளாக சினிமா வாழ்க்கை தொடர்ந்து தோல்விகளையே பரிசாக கொடுத்து வருவதால், ஆதிபுருஷ் படம் எப்படியிருக்குமோ என ரசிகர்கள் சிலர் கவலையுடன் உள்ளனர். 

மேலும் படிக்க | உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! அவரது தந்தை குறித்து பேசி உள்ளார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News