நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Enna Vilai Movie Shoot Wrapped : கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Enna Vilai Movie Shoot Wrapped : இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும் முழுப்படப்பிடிப்பும் சீக்கிரம் முடிவடைய ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை கதைக்கு புது உத்வேகம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். விரைவில் படத்தில் அறிவுப்பு தேதி வெளியாகும்” என்றார்.
கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | அட, இதுதான் விடாமுயற்சி படத்தின் கதையா? ரொம்ப சிம்பிளா இருக்கே..
மேலும் படிக்க | விஜய் Fans ரெடியா இருங்க! சச்சின் படம் ரீ-ரிலீஸ்! எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ