Malayalam Movie Premalu Tamil Dubbed Release Date Latest News : கடந்த சில நாட்களாக தென்னிந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் படம், மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம், கேரளாவில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இன்னாெரு படத்திற்கும் ரசிகர்கள் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அது என்ன படம் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பிரேமலு படத்திற்கும் வரவேற்பு..


மலையாள இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கிய படம், மஞ்சுமெல் பாய்ஸ். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், விமர்சகர்கள், பிரபலங்கள், பொது ஜன மக்கள் என பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இப்படம், உலகளவில் தற்போது 150 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக 15 கோடிக்கும் மேல் வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்திருக்கிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து, இன்னொரு மலையாள படமும் தமிழக மக்களிடையே பரவலான நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த படம்தான் பிரமேலு.


பிரேமலு: (Premalu Tamil Release Latest News)


பிரேமலு திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு, மாத்யூ தாமஸ், ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே நன்கு வரவேற்பை பெற்று வந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்ததால் இதனை பார்க்க பலர் தவறிவிட்டனர். இந்த வருடத்தில் வெளியாகி 100 கோடி வசூலை பெற்ற மலையாள படங்களின் லிஸ்டில் பிரேமலுவும் உள்ளது. 


மேலும் படிக்க | விவாகரத்திற்கு பின்பு முதன்முறையாக தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா! என்ன சொன்னார்?



டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ்:


பிரேமலு திரைப்படம், கேரளா மற்றும் தமிழ் நாட்டில் மலையாள மொழியிலேயே வெளியானது. இதையடுத்து, இப்படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 8ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மலையாள படத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு!


மலையாள படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும், அதற்குள் நல்ல கதையை படமாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என மலையாள திரையுலகினர் யோசிப்பர். அங்கு எடுக்கப்படும் படங்களுக்கு தமிழ் மற்றும் பிற மொழி படங்களை போல பல காேடிகள் எல்லாம் ஒதுக்கப்படுவதில்லை. சிம்பிளான குடும்ப கதை, காதல் கதை பாேன்ற கதைகளையே நல்ல ஃபீல் குட் படங்களாக எடுத்து ரசிகர்களுக்கு கொடுக்கின்றனர். அங்கு எடுக்கப்படும் பெரும்பாலான படங்களில் தேவையற்ற கமர்ஷியல் அம்சங்கள் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படி, குறுகிய பட்ஜெட்டிலேயே எடுக்கப்படும் படங்கள், நன்றாக ஹிட் அடிப்பதற்கு காரணம் அந்த படத்தின் வலுவான திரைக்கதையும், அதற்காக படக்குழு எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல்களும்தான் என்கின்றனர் திரை விமர்சகர்கள். மலையாள திரை இயக்குநர்கள், தமிழ் மக்களின் ஆதரவை பெற இன்னொரு உத்தியையும் கையாள்கின்றனர். மலையாளம் பேசுபவர்களுக்கு தமிழும், தமிழ் பேசுபவர்களுக்கு மலையாளமும் நன்றாகவே புரியும். இதை வைத்து, மலையாள படங்களில் ஏதேனும் தமிழ் பேசும் கதாப்பாத்திரத்தையோ, காட்சியையோ வைக்கின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமம் போன்ற படங்கள் தமிழகத்தில் பெரிய ஹிட் ஆக, இந்த இரண்டு அம்சங்கள் காரணம் என்று கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்கு பிறகு பணக்கார இயக்குநராக மாறிய அட்லீ! வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ