பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பதில் ‘இவர்’ நடிக்க இருந்தார்! யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம், பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் வேறு ஒருவரை மணிரத்னம் நடிக்க வைக்க இருந்தாராம்.
பொன்னியின் செல்வன்:
கோலிவுட் திரையுலகில் மட்டுமன்றி, பான் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய மிகவும் பிரபலமலான வரலாற்று கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தின் மீது பலருக்கும் பலவிதமாக நம்பிக்கை இருந்தது. அது மட்டுமன்றி, ‘லெஜண்ட்’ இயக்குநர் என பலரால் புகழப்படும் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். ஐஸ்வர்யா ராய் நந்தினி எனும் கேரக்டரில் வந்தார். இதில், அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருந்ததாக மணிரத்னம் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தவர்..
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இப்போது அல்ல, 90களிலேயே மணிரத்னம் இயக்க நினைத்தார். அப்போது வெவ்வேறு நடிகர்களை பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களாக களமிறக்க இருந்தார். அந்த லிஸ்டில், இருந்தவர், நடிகை ரேகா. இவரை நந்தினி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்ததாக மணிரத்னம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கமல்ஹாசனையும் இதில் நடிக்க வைக்க இருந்ததாகவும் இது குறித்த டைலாக் மற்றும் நடிப்பு ஒத்திகை பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது அவருக்கு ஒத்து வராததாலும் பட வேலைகள் ஆரம்பிக்கப்படாததாலும் கமலை நடிக்க வைக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதை தீர்த்துக்கொள்ள, பொன்னியின் செல்வன் படத்தில் இண்ட்ரோவில் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்!
ரேகாவை ஏன் நடிக்க வைக்க நினைத்தார்?
நடிகை ரேகாவை நந்தினியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் முன்கூட்டியே தோன்றியதாக மணிரத்னம் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அது ஏன் என்று கேட்ட போது, அவர் அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியதாகவும் அதனால்தான் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
மணிரத்னமின் அடுத்த படம்:
இயக்குநர் மணிரத்னம், அடுத்து கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறார். கமலின் 234வது படமான இதற்கு, தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்த வீடியோ நேற்று வெளியானது. இதில் கமல் “என் பெயர் ரங்கராய நாயக்கர்” என்று பேசியிருந்தார். இதனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சயாகி வருகிறது.
தக் லைஃப் அர்த்தம் என்ன?
மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தின் டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பது பலருக்கும் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒன்று ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி, மீடியாவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான ஒரு வார்த்தைதான் Thug Life (தக் லைஃப்). இதற்கு அர்த்தம், “எவன் ஒருவன் பூஜ்ஜியத்தில் தொடங்கி தனக்கு பெயர் சேர்க்கும் வகையில் ஏதோ ஒன்றை அல்லது தன்னையே பெரிதாக வளர்த்து கொள்கிறானோ, அவனை தக்” என்பர். எளிமையாக சொல்லப்போனால், இழப்பதற்கு எதுவும் இல்லாத எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தைரியமான வாழ்கை உடையவனனின் வாழ்வையே பலர் ‘தக் லைஃப்’ என்று பிற நாடுகளில் குறிப்பிடுகின்றனர். இதனால்தான், கமலின் இப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Thug Life என்றால் என்ன? கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ