நாயகன் படம் வெளியாகி 36 வருடங்களுக்கு பிறகு கமல்-மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம், Thug Life. இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியானது. இந்த டைட்டிலிற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து பலர் குழம்பி வருகின்றனர்.
Thug Life திரைப்படம்:
தமிழ் திரையுலகின் லெஜண்ட் இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், மணிரத்னம் (Mani Ratnam). இவரும் கமல்ஹாசனும் (Kamal Haasan) நாயகன் படத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். அந்த படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு கமலின் 234வது படத்தில் அவருடன் இணைந்துள்ள மணிரத்னம், இதில் பெரிய சம்பவம் செய்ய காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும் படிக்க | கமல்ஹாசன் - H. வினோத் இணையும் KH 233 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
Thug Life என்றால் என்ன?
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒன்று ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி, சோஷியல் மீடியாவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான ஒரு வார்த்தைதான் Thug Life (தக் லைஃப்). இதற்கு அர்த்தம், எவன் ஒருவன் பூஜ்ஜியத்தில் தொடங்கி தனக்கு பெயர் சேர்க்கும் வகையில் ஏதோ ஒன்றை அல்லது தன்னையே பெரிதாக வளர்த்து கொள்கிறானோ, அவனை தக் என்பர். சிம்பிளாக சொல்லப்போனால், இழப்பதற்கு எதுவும் இல்லாத எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தைரியமான வாழ்கை உடையவனனின் வாழ்வையே பலர் ‘தக் லைஃப்’ என்று பிற நாடுகளில் குறிப்பிடுகின்றனர்.
கமலின் படத்திற்கு ஏன் இந்த பெயர்?
கமலிட் டைட்டில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் “ என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என்று கூறுவார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் “நாயக்கர்” பரம்பரையை சேர்ந்தவர்களை “குற்றப்பரம்பரை” என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது, அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் குற்றசெயல்களில் ஈடுபடுவர் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. அதையே, இப்போதும் பலர் வழிவழியாக நம்பி வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது, அவர்களை விரட்டி ஓட விட்டவர்களுள் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள், மேற்கூறிய பரம்பரைகாரர்கள். தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இவர்களை, ஆங்கிலேயர்கள் “Thugs” என்று குறிப்பிட்டனர்.
1800ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இந்திய நெடுஞ்சாலைகளில், பல்லாயிரக்கணக்கான பயணிகளை, வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த குற்றவாளி கும்பல் ஒன்று நடமாடியதாக நம்பப்பட்டது. இவர்கள் தக்குகள்தான் எனவும் 'பிண்டாரிகள்' எனவும் ஆங்கில அரசின் ஆவணங்கள் குறிக்கின்றனர். இவர்களை கூண்டோடு அழிக்க முடிவெடுத்த ஆங்கிலேய அரசு, பலரை சிறை பிடித்து, 2,000த்திற்கும் மேற்பட்டோரை கொன்றது. இந்த வரலாற்றை மையமாக வைத்து, கமலின் Thug Life படத்தின் கதை எழுதப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | KH 234 படத்தின் டைட்டில் இதுதான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ