கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர், மணிரத்னம். மும்பையில் நடக்க உள்ள ஒரு திரைப்பட விழாவில், இவர் ஒரு விருதினை வாங்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் திரையுலகிற்கு, தமிழ் திரையுலகின் முகமாக இருப்பவர் மணிரத்னம். இவரது படங்களான ராேஜா, உயிரே, ஓகே கண்மணி உள்ளிட்டவை இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்துள்ளன. இவருக்கு மும்பையில் நடைபெற உள்ள ஒரு விழாவில் அவருக்கு விருது கிடைக்க உள்ளது. 


ஜியோ திரைப்பட விழா:


மும்பையில், ஜியோ MAMI (The Mumbai Academy of Moving Image) விருதுகள் விழா நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் உலகளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், சினிமா கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 


மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!


வெளிநாட்டு இயக்குநருடன் சேர்ந்து விருது வாங்கும் மணிரத்னம்:


தெற்கு ஆசிய அளவில், சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது, ஜியோ சினிமா விருதுகளில் வழங்கப்பட இருக்கிறது. இதில், லுகா குவாக்னினோ (Luca Guadagnino) என்ற வெளிநாட்டு இயக்குநருடன் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. மணிரத்னம், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நீடித்து நிற்கும் இயக்குநராக இருந்து வருகிறார். இதே போல வெளிநாட்டு இயக்குநர் Luca Guadagnino-வும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார். இவர்களை கெளரவிக்கும் வைகயில் ஜியோ MAMI விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. 


மணிரத்னமின் ஹிட் ஆன படங்கள்:


சினிமா ஆசையே இல்லாமல் சினிமாவிற்குள் வந்த ஒருவர், மணிரத்னம். இவர் ஆரம்பத்தில் கன்னட படங்களை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அடுத்து, தமிழில் அவர் இயக்கிய ‘மெளன ராகம்’ திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. அடுத்து அவர் இயக்கிய நாயகன், அஞ்சலி, ரோஜா, பாம்பே, உயிரே (தில் சே) ஆகிய படங்கள் குடும்ப ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து அலைபாயுதே, ஓகே கண்மணி போன்ற காதல் கதைகளை எடுத்து இளம் தலைமுறையினரையும் கவர்ந்தார். 


கடைசியாக மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியன் செல்வன் திரைப்படம், இந்திய அளவில் மெகா ஹிட் அடித்தது. இதன் இரண்டு பாகங்களுமே 500 கோடியை தாண்டி வசூல் செய்தன. இப்படத்திற்காக இவர் பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ