லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Lokesh Kanagaraj Net Worth: தமிழ் திரையுலகில் தற்போது டாப் இயக்குநராக வலம் வருபவர், லோகேஷ் கனகராஜ். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 25, 2023, 03:55 PM IST
  • தமிழ் திரையுலகில் தற்போது டாப் இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
  • இவர் சமீபத்தில் லியோ படத்தை இயக்கியிருந்தார்.
  • லோகியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?  title=

கோலிவுட் திரையுலகில், தற்போது முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் லியோ படம் திரைக்கு வந்தது. 

லோகேஷ் கனகராஜ்:

திரைப்பட இயக்குநர்களுக்கு பெரிய பாதையை அமைத்து கொடுத்த நிகழ்ச்சி, “நாளைய இயக்குநர்”. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். 2017ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’தான் இவர் இயக்கிய முதல் படம். இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து “கைதி” படத்தை இயக்கினார். இந்த படம் இவருக்கு இயக்குநராகவும், திரைப்பட கலைஞராகவும் பெரிய லிஃப்ட் கொடுத்தது. 

இவர் இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்க லோகேஷ் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ

லோகேஷின் சொத்து மதிப்பு..

லோகேஷ் கனகராஜ், திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன்னர் ஒரு வங்கயில் மேனேஜராக இருந்தார். படங்களை இயக்க வந்த பிறகு இவரது வாழ்க்கையே மாறியது. லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையடுத்து ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக இவர் 70 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு, சுமார் 35.6 கோடி சொத்து மதிப்பு இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் லோகி..

லாேகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமான ‘கைதி’ படத்தில் இருந்தே முன்னணி ஹீரோக்களை டார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டார். கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியதை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து, கைதி கதையுடன் தொடர்புடைய கதையாக இவர் இயக்கிய படம், விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனை ‘விக்ரம்’ படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்த லோகி, அவருடன் சேர்ந்து பகத் பாசில், நரேன், சூர்யா என பல நடிகர்களை இறக்கியிருந்தார். இதையடுத்து வந்துள்ள லியோ படத்திலும் பல நடிகர்களை காமியோ கதாப்பாத்திரமாக நடிக்க வைத்திருக்கிறார். 

கைதி, விக்ரம், லியோ என மூன்று படங்களையும் தற்போது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்குள் (LCU) கொண்டு வந்த இவர், அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படத்தினை தனி கதையாக உருவாக்கி வருகிறார். அடுத்து விக்ரம் 2, கைதி 2 போன்ற படங்களும் எல்.சி.யுவிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அல்லாமல், நடிகர் சூர்யாவிற்காக “இரும்புக்கை மாயாவி” எனும் கதையையும் அவர் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் முக்கிய வில்லனாக ரோலக்ஸிற்காகவும் ஒரு படத்தை லோகி எடுப்பார் என கூறப்படுகிறது. 

“10 படங்கள் மட்டுமே எடுப்பேன்..”

லோகேஷ் கனகராஜ், சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது படங்கள் குறித்து பேசிய அவர், “பத்து படங்களுக்கு மேல் எடுக்க மாட்டேன், திரையுலகை விட்டு விலகி விடுவேன்” என்று கூறினார். இதைக்கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் குவெண்டின் டாரண்டினோ (Quentin Tarantino). 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் என்று கூறிய இவர், தற்போது வரை அந்த 10 படங்களை இயக்கி முடிக்கவில்லை. இதே போன்ற யுக்தியைத்தான் லோகியும் தமிழ் சினிமாவில் கையாள்வதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News