மணிகண்டன் இந்திய திரைப்பட எழுத்தாளரும், நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார். மணிகண்டன் ஒரு பிரபலமான உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பின்னர், இவர் ஒரு பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதே நேரத்தில் பல படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பின்னணி பேசி வந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா II: வில்லா படத்துடன் எழுத்தாளராக அறிமுகமானார். பின்னர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிகராக அறிமுகமான இவர், நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். எம். எசு. பாசுகர், லல்லு ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் என்ற இயக்குனரின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் படத்தில் மணிகண்டன் ஒரு வில்லனாக நடித்தார். அதன் பிறகு புஷ்கர்-காயத்ரியின் விக்ரம் வேதா படத்திற்கான வசனங்களை எழுதினார். மேலும் இப்படத்தில் ஒரு காவலர் வேடத்திலும் நடித்தார். 2018 இல், பா. ரஞ்சித் தனது காலா படத்தில் ஒரு வேடத்தை இவருக்கு அளித்தார். இவர், இயக்குநர் சிவாவின் விஸ்வாசம், ஜீது ஜோசப் இயக்கிய தம்பி ஆகிய படத்தில் உரையாடல் எழுத்தாளராக இருந்தார். ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி என்ற காதல் படத்தில் நிவேதிதா சதீஷுடன் இணைந்து நடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'நாரை எழுதும் சுயசரிதம்' என்ற சுயாதீன திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். 'இந்திய சினிமா போட்டி'யின் கீழ் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்க இது தேர்வு செய்யப்பட்டது.அத்துடன் 16 வது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படங்களில் இதுவும் ஒன்றாகும்.


மேலும் படிக்க | “அவர் ஒன்றும் என் கணவர் இல்லை..” பீட்டர் குறித்து காட்டமான பதிவை வெளியிட்ட வனிதா


இந்நிலையில் தற்போது ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் குட் நைட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். டிரைலருடன் லோகொஷ் கனகராஜ் “சேர்ந்தே கொண்டாடுவோம் என்ன.. மணிகண்டன் ஆரம்பிக்கலாமா?” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.




நாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்தி வேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார். தற்போது ’குட் நைட்’திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இந்த படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | சரித்திர சாதனை படைக்கும் வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன் பாகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ