வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனுஷ் தனது டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.