மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்! ஹீரோ யார் தெரியுமா?
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன். வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு!
திரு. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.
மேலும் படிக்க | Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே நாராயணா பேசும் போது, "எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாள திரையுலகில் களமிறங்குகிறோம். ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும். மிகவும் தலைசிறந்த குழுவுடன் இணைவதால், அந்த விஷயத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
இயக்குநர் சிதம்பரம் பேசும் போது, "கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், இந்த குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை," என்று கூறினார். எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது, "இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்," என்றார்.
2025 ஆம் ஆண்டு துவங்கும் இந்த வேளையில் கே.வி.என். நிறுவனம் கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் தளபதி 69, இந்தி மொழியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படங்களுடன் தற்போது மலையாள துறையிலும் கால்பதிக்கிறார்கள். இதன் மூலம் கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் பலம் கூடுவதோடு, பொழுதுபோக்கு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிதம்பரம். இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ