அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..

Jason Sanjay With Ajith Kumar Manager : பிரபல நடிகரும் தவெக அரசியல் கட்சியின் தலைவருமான விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய். இவர், தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Jason Sanjay With Ajith Kumar Manager : தமிழ் திரையுலகில் புதிய இயக்குநராக நுழைந்திருப்பவர் ஜேசன் சஞ்சய். விஜய்யின் மகனான இவர், ஓராண்டுக்கு முன்பு லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படத்தை எடுக்க சைன் செய்தார். இதையடுத்து, படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் இவர் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய்க்கு 24 வயதாகிறது. விஜய்யுடன் அவர் சில படங்களில் சேர்ந்து நடனமாடியிருக்கிறார். வெளிநாட்டில் திரைப்பட பட்டிப்படிப்பு பயின்ற இவர், விரைவில் தன் முதல் படத்தில் இயக்க இருக்கிறார். 

2 /7

ஜேசன் சஞ்சையின் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அப்டேட் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. 

3 /7

ஜேசனின் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மாதங்களில் தொடங்க இருக்கிறார். 

4 /7

ஜேசனின் முதல் படத்தில் நடிக்க இருப்பது குறித்து சில ஊடங்களுக்கு பேட்டியளித்த சந்தீப் கிஷன், இந்த படத்தின் கதையை 2 மணி நேரமாக சஞ்சய் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார். 

5 /7

இப்படத்தின் பெயர் உள்பட பல விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய் மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

6 /7

விஜய்யின் மகன், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் எடுத்த புகைப்படம் இது. விஜய் மகனின் தோள் மீது சுரேஷ் சந்திரா கை போட்டிருக்கும் இந்த போட்டோவை பார்த்த பலர், “இருவரும் ரொம்ப நெருக்கமானவர்களோ?” என்று கேட்டு வருகின்றனர். 

7 /7

ஜேசன் படத்திற்கு சுரேஷ் சந்திராதான் செய்தி தொடர்பாளர் என்பதால், இந்த நெருக்கம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.