Manjummel Boys Worldwide Box Office Collection in Tamil : மலையாள சினிமாவில் மைல்கல்லை பதித்திருக்கும் படம், மஞ்சுமெல் பாய்ஸ். சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு உலகம் முழுவதும் அதிகளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை ஒட்டி, இப்படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சுமெல் பாய்ஸ்:


மலையாள சினிமாவை ஆவலுடன் பார்ப்பதற்காக தமிழ் நாட்டில் எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் மலையாள படங்களை பார்த்து விட்டு அது குறித்து பேசும் மக்கள், கடந்த சில நாட்களாக திரையரங்கிற்கு சென்று ஒரு படத்தை பார்க்க சொல்லி தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வருகின்றனர். அந்த படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ். 


கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், உலகளவில் தற்போது வசூலை குவித்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கியிருந்தார். பரவா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், இப்படம் உருவானது. அப்படி அனைவரும் பேசும் அளவிற்கு என்ன இருக்கிறது இந்த படத்தில்? 



உண்மை கதை:


2006ஆம் ஆண்டு கேரள மாநிலம், கொச்சி-மஞ்சுமெல் என்ற இடத்தில் இருந்து சில நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். வந்த இடத்தில், குணா குகையில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். அப்போது, வந்த நண்பர்களில் ஒருவர், பல அடி ஆழம் உள்ள “சாத்தானின் சமையலறை” என்று கூறப்படும் பல அடி ஆழ குகைக்குள் விழுந்து விடுகிறார். அவர் என்ன ஆனார்? அவரை உடன் இருந்த நண்பர்கள் மீட்டனரா இல்லையா? என்பதை சர்வைவல் த்ரில்லர் பாணியில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கூறியிருக்கின்றனர். 


இப்படம், உண்மையாகவே கொடைக்கானலுக்கு சென்று அங்கு குணா குகையில் சிக்கி கொண்ட ஒருவர் குறித்து எடுக்கப்பட்ட கதை ஆகும். இதனாலேயே இப்படத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?


100 கோடி வசூல்:


மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிநடை பாேட்டு வருகிறது. இப்படம், நேற்றைய நிலவரப்படி உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்தது. 



இதுகுறித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குநர் சிதம்பரம், மஞ்சுமெல் பாய்ஸ் படம் 100 கோடியை வசூல் செய்துள்ளது ஆச்சரியமாக இருப்பதாகவும், படத்திற்கு ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி எனவும், குறிப்பாக தமிழ் பார்வையாளர்களுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துளார்.


தமிழகத்தில் மட்டும் வசூல் எவ்வளவு? 


மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தையும், அப்படத்தில் இடம் பெற்றிருந்த “கண்மணி அன்போடு காதலன்..” பாடலையும் அழகாக உபயோகித்திருப்பதால் தமிழ் ரசிகர்கள், இப்படத்திற்கு எக்கச்சக்க ஆதரவை அளித்துள்ளனர். தமிழகத்தில், சில திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருந்த இப்படம், ரசிகர்களின் பேரதாரவிற்கு பின்னர் காட்சிகள் நீட்டிக்கப்பட்டு மேலும் பல திரையரங்குகளில் வெளியானது. கடந்த இரண்டு வாரங்களில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை தமிழ்நாட்டில் ரூ.10 கோடி கலெக்ஷனை மிஞ்சிய முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். இதற்கு முன்னர் மின்னல் முரளி, ஹ்ருதயம், லூசிஃபர், பிரேமம் உள்ளிட்ட படங்களே தமிழ் நாட்டில் அதிக வசூலை பெற்றிருந்தன. 


மேலும் படிக்க | அஜித்தை பார்த்து ‘ஆமை’ என கூறிய விஜய்! வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ