சமீபத்தில் ZEE5 இல் வெளியான 'மனோரதங்கள்' எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது. இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம். 


 ZEE5 இல் இப்போதே 'மனோரதங்கள்' பாருங்கள் !


1. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.மாபெருமெ எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்த படைப்பு உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றி, பார்வையாளர்களுக்கு ஒரு பார்வையை வழங்குகிறது.


மேலும் படிக்க | Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?


2. சினிமா மேஸ்ட்ரோக்கள் மற்றும் முன்னோடிகளான பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாமபிரசாத், மகேஷ் நாராயணன், ஜெயராஜன் நாயர், அஸ்வதி நாயர் மற்றும் ரதீஷ் அம்பாட் போன்ற ஆளுமை மிக்க இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த அற்புதமான படைப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் தனித்துவமான காட்சித் திறனையும் கதை பாணியையும் இந்த படைப்பில் கொண்டு வந்திருப்பதால், இந்த கூட்டு முயற்சி, பலதரப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் மலையாளப் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பெரும் உரையாடல்களையும் தூண்டியுள்ளது.


3. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மூதாதையர் வீடுகள், பசுமையான வயல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் கல்பாதைகள் வழியாக கேமரா லாவகமாக பயணிக்கும்போது, 'மனோரதங்கள்' படத்தின் காட்சிக் கோர்வைகள் பார்வையாளர்களை எம்.டி.யின் அன்பான அரவணைப்பில், அவரின் உலகத்திற்குள் மூழ்கடிக்கிறது. இந்த ஆந்தாலஜியின் ஒளிப்பதிவு மற்றும் உருவாக்கம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் நீங்கள் WOW என்று சொல்லத் தூண்டும்!


4.மலையாள சினிமாவின் மிகச்சிறந்த திறமைகள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்காக ஒருங்கிணைந்துள்ளனர், பழம்பெரும் ஆளுமைகளான மம்மூட்டி, மோகன்லால், பன்முக நடிகரான பஹத் பாசில் மற்றும் அழகி பார்வதி திருவோத்து உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பங்கேற்பில், இந்த அற்புதமான கதைகள் உயிர்பெற்றுள்ளது. இந்த நட்சத்திரங்கள் நாயரின் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளை சிரமமின்றி வெளிப்படுத்தி, பார்வையாளர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.


5 மனித உறவுகளின் நுணுக்கங்களை பேசும் ஒரு ஆழ்ந்த உணர்ச்சிமிகு பயணம் தான் 'மனோரதங்கள்'. பார்வையாளர்களை அவர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதைகளுக்குள் இழுத்து செல்லும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் ஒரே மாதிரி உணர்வுகளான காதல், இழப்பு மற்றும் சுய-கண்டுபிடிப்பு எனும் கருப்பொருள்களில் ஆழமான கதைகளை கண்முன் விருந்தாக படைக்கிறது. மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராய்வதற்கான ஒரு சினிமா டூர் இது.


“மனோரதங்கள்” , இப்போது ZEE5 இல் கிடைக்கிறது, இலக்கிய மேதை M.T-வாசுதேவன் நாயரின் விவேகமுள்ள ஒவ்வொரு ஆர்வலர்களும் மற்றும் திரை ரசிகர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.!


மேலும் படிக்க | ‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே.. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ