லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லியோ படத்தில் மன்சூர் அலிகான்:


விஜய் ஹீரோவாக நடிக்க, லோகி இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், அவர் ஒரு கைதியின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால், இவரும் எல்.சி.யுவில் இருக்கும் ஒரு நாயகராக மாறிவிட்டார். 


மன்சூரின் தீவிர ரசிகரான லோகி..


மன்சூர் அலிகான், சமீபத்தில் சில ஆண்டுகளாகத்தான் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்னரெல்லாம் அவர் நடித்தது வில்லன் கதாப்பாத்திரங்களில் மட்டும்தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். 2019ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘கைதி’ படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் எழுதியதாக லோகி சில நேர்காணல்களில் கூறியிருக்கிறார். இதையடுத்து, வெளியான விக்ரம் படத்திலும் அவர், மன்சூர் அலிகான் நடனமாடியிருந்த “சக்கு சக்கு வத்திக்குச்சி சட்டுனுத்தான் பத்திக்கிச்சு..” பாடலை காண்பித்திருப்பார். இதையடுத்து, லியோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தை மன்சூருக்கு கொடுத்திருந்தார், லோகி. ஆனால், அது மிக குறுகிய நிமிடங்களுக்கு வரும் கதாப்பாத்திரமாகவே இருந்தது. 


மேலும் படிக்க | இறைவன் to சந்திரமுகி 2-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்புது படங்கள்..!


தமிழ் சினிமாவின் பயமுறுத்தும் வில்லன்களுள் ஒருவராக வலம் வந்த இவர், சில வருடங்களுக்கு முன்னாள் இருந்து தாமாகவே படம் எடுத்து அதில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார். 


தனது கதாப்பாத்திரம் குறித்து மன்சூர் அலிகான் பேசியது..


மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் லியோ படம் குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள அவரது கதாப்பாத்திரம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். 


அரசியல் கொள்ளை குறித்து பேசிய மன்சூர் அலிகான்:


மன்சூர் அலிகான் பேசியதாவது, “500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம். ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்” என்று கூறியுள்ளார். 


மேலும், “லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல...அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு” என்றும் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். 


பாலஸ்தீனத்திற்கு அழைத்த மன்சூர்:


லோகேஷ் கனகராஜை, “பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம். 500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க” என்று கூறிய மன்சூர் அலிகான், “சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு…வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!” என்று பேசியுள்ளார். 


மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ