இப்படி ஒரு டீட்டெயிலிங்கா... லோகேஷ் கனகராஜை புகழும் ரசிகர்கள்

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 9, 2022, 04:09 PM IST
  • விக்ரம் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது
  • லோகேஷ் கனகராஜின் பதில் வைரலாகியுள்ளது.
  • கைதி 2 படத்தை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்
இப்படி ஒரு டீட்டெயிலிங்கா... லோகேஷ் கனகராஜை புகழும் ரசிகர்கள் title=

கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த 3ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இளம் இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் படங்களில் தங்களை நிரூபிக்கத் தவறுகின்றனர் என்ற விமர்சனத்தை லோகேஷ் கனகராஜ் இதன் மூலம் உடைத்திருக்கிறார் என பலர் கூறிவருகின்றனர்.

மேலும் ஒரு ஃபேன் பாய் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதையும், பல படங்களின் கதாபாத்திரங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்பதையும் லோகேஷ் பாடம் எடுத்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் புகழ்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்!

இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதால் கமல் தரப்பும் செம ஹேப்பியாக இருக்கிறது. அதன் எதிரொலியாக, லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், லோகேஷின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இருசக்கர வாகனம், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசுகள் கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் கமல்.

Lokesh, Kamal

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் #AskDirLokesh என்ற ஹேஷ்டேக் மூலம் விக்ரம் படம் குறித்து கேள்வி எழுப்பலாம் என வீடியோ வெளியிட்டிருந்தா.

இதனையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் பல கேள்விகளை எழுப்பினார். நடிகர் அர்ஜுன் தாஸ், “புதிய காரில் என்னை எப்போது அழைத்து செல்லப்போகிறீர்கள்” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த லோகேஷ் எப்போது வேண்டுமானாலும் மச்சி என பதிலளித்தார்.

Arjun Das

ரசிகர் ஒருவர், “கைதி படத்தில் அன்பு (அர்ஜுன் தாஸ்) சாகடிக்கப்பட்டிருப்பார். ஆனால் அவர் எப்படி விக்ரம் படத்தில் இடம்பெற்றிருக்கிறார். இதை நம்ப முடியவில்லை” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்,  “கைதியில் அர்ஜூன் தாஸின் (அன்பு) தாடை மட்டுமே நெப்போலியனால் தாக்கப்பட்டிருக்கும். அதனால்தான் விக்ரமில் அன்புக்கு தையல் போடப்பட்ட அச்சு இருக்கும். இது குறித்து கைதி-2ல் தெரியவரும்” என்றார்.

 

இதைப் பார்த்த நெட்டிசன்கள் லோகேஷின் டீட்டெயிலிங் வேற லெவலில் இருப்பதாகவும், கைதி 2 இன்னும் அதகளமாக இருக்கும் என கூறி இந்த குறிப்பிட்ட ட்வீட்டை வைரலாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | ஒரு கணம் ஒருபோதும் பிரியக்கூடாதே என் உயிரே.... திருமண கோலத்தில் நயன் - விக்னேஷ் சிவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News