மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்த மார்கோ!
Marco Movie : IMDbன் சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்த முதல் மலையாளத் திரைப்படம் மற்றும் BookMyShowல் 100k விருப்பங்களை எட்டி சாதனை படைத்துள்ளது மார்கோ.
Marco Movie : பான்-இந்தியன் நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் 'மார்கோ'. இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். மார்கோ படம் IMDbல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் புக்மைஷோவில் மார்கோ 100k விருப்பங்களை எட்டி அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளது. இது மார்கோ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மார்கோ ஐந்து மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது படத்தின் வசூலில் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய படங்களின் மூலம் உன்னி முகுந்தன் இந்திய முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பெற்றுள்ளார். மார்கோ படத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ், அன்சன் பால், கபீர் துஹான்சிங், அபிமன்யு திலகன், ரதி தரேஜா மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சிறந்த நடிகர்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிமுகப்படுத்தி உள்ளது. சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு, ஷமீர் முஹம்மது எடிட்டிங், ரவி பஸ்ரூர் இசை போன்ற திறமையான தொழில்நுட்பக் குழு இந்தப் படத்தில் உள்ளது.
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ் ஷெரீப் முகமது மார்கோ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஹனீப் அதேனி இயக்கியுள்ளார். இரக்கமற்ற 'மார்கோ'வாக உன்னி முகுந்தன் மாறியிருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மார்கோ படம் இந்திய சினிமாவில் ஒரு சிறந்த அதிரடி மற்றும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பான்-இந்திய திரைப்படங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கும்.
க்யூப்ஸ் இன்டர்நேஷனலின் 'மார்கோ' படத்தை இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மார்கோ படம் பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் உடன் இணைந்து டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளது. மார்கோ சந்தேகத்திற்கு இடமின்றி இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாகும். அதன் நட்சத்திர நடிகர்கள், ஈர்க்கும் கதைக்களம் மற்றும் புரடக்சன் வேல்யூ ஆகியவை மார்கோ படத்தை திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மனோதரங்கல் மலையாள ஆந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியீடு
மேலும் படிக்க | இந்த 5 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ