இந்த 5 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best Thriller Movies: த்ரில்லர் படங்களை எடுப்பதில் மலையாள சினிமா முதல் இடத்தில் உள்ளது.  த்ரிஷ்யம் முதல் ஜோஜி வரை பல திரில்லர் படங்களை கொடுத்துள்ளது.  

 

1 /5

ஜோஜி - Joji  தனது வித்தியாசமான நடிப்புக்கு பெயர் பெற்ற ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான படம் ஜோஜி. திலீஷ் போத்தனால் இயக்கப்பட்ட இந்த படம் த்ரில்லர் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அமேசான் பிரைமில் ஜோஜியை பார்க்கலாம்.  

2 /5

ஜன கண மன - Jana Gana Mana ஜன கண மன ஒரு அரசியல் திருப்பம் கொண்ட ஒரு கோர்ட் ட்ராமா படமாகும். பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் டிஜோ ஜோஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். Netflixல் ஜன கண மன படத்தை பார்க்கலாம்.  

3 /5

ரோர்சாச் - Rorschach மலையாள திரையுலகின் ஜாம்பவான் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் ரோர்சாக். நிசாம் பஷீர் இயக்கிய இந்த த்ரில்லர் படம் வித்தியாசமான அனுபவத்தை தந்தது.  ஹாட்ஸ்டாரில் ரோர்சாக் படத்தை பார்க்கலாம்.  

4 /5

கூமன் - Kooman த்ரிஷ்யம் படத்தின் இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிஃப் அலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் படம் கூமன். அமேசான் பிரைமில் கூமன் படத்தை பார்க்கலாம்.  

5 /5

புருஷ பிரேதம் - Purusha Pretham பெரிய நட்சத்திரங்கள் இல்லாத வழக்கத்திற்கு மாறான ஒரு திரைக்கதையை புருஷா பிரேதம் கொண்டுள்ளது.  கிரிஷாந்த் இயக்கிய இந்த படத்தை SonyLivல் பார்க்கலாம்.