தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர், விஷால். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், புதிதான கதை கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான், மார்க் ஆண்டனி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்க் ஆண்டனி:


அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை டைம் ட்ராவல் கதையில் நடிக்க வைத்த படம்தான், மார்க் ஆண்டனி. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல ஒரு பெண் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர். படம், நேற்று (செப்டம்பர் 15) வெளியானது. 


வசூல்:


தமிழகத்தில் 500 ஸ்கிரீனில் நேற்று மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியானது. உலகளவிலும் பல திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் இப்படம் 11.55 கோடி ரூபாய் வரை மார்க் ஆண்டனி படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான விஷால் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் மார்க் ஆண்டனி படம் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. 


மேலும் படிக்க | விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?


மார்க ஆண்டனி படம், உலகளவில் இதுவரை 12 கோடியை தாண்டி வசூல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக்வும், கர்நாடகா மற்றும் இதர மாநிலங்களில் 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 


இன்றைய வசூல் என்னவாக இருக்கும்..? 


படம் வெளியாகியுள்ள இரண்டாம் நாளான இன்று, 7 கோடி வரை படம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. 


பாசிடிவான விமர்சனம்..


மார்க் ஆண்டனி படத்திற்கு சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் பாசிடிவாக பேசியுள்ளனர். இதுவரை பார்த்திராத புதுவித பாணியில் மார்க் ஆண்டனி படத்தின் கதை பயணிப்பதாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு படத்தில் காமெடி அம்சங்கள் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தரப்பு ரசிகர்கள் படம் சுமாராக இருப்பதாகவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை என்றும் கூறுகின்றனர். 


மேலும் படிக்க | Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ