Amigo Garage Movie Review: இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர்.  வெறும் 152 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் ஒரு இளைஞர் தவறான பாதையை தேர்வு செய்தால் அவரது வாழ்க்கை எப்படி மாறும் என்பதை எடுத்து காட்டுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | OTT Release: மார்ச் 27 அன்று பிளாக்பஸ்டர் 'லவ்வர்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!


ஹீரோ மகேந்திரன் சிறுவயதிலிருந்தே அவரது ஏரியாவில் இருக்கும் அமிகோ கேரேஜ் என்ற கார் செட்டில் உள்ளவர்களுடன் பழக நினைக்கிறார். ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அதே கேரேஜ்க்குள் செல்ல மஹேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு ஓனராக இருக்கும் ஜிஎம் சுந்தருடன் நல்ல உறவு ஏற்படுகிறது. ஸ்கூலில் தொடங்கி கல்லூரி முடியும் வரை தினசரி அங்கு சென்று பேசி அரட்டை அடித்து அனைத்தையும் கற்றுக் கொள்கிறார் ஹீரோ மகேந்திரன். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் பெரிய ரவுடியாக இருக்கும் நபருக்கும் ஹீரோவுக்கும் பாரில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை மகேந்திரனின் வாழ்க்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதே அமிகோ கேரேஜ் படத்தின் கதை.


பெரிதாக பில்டப் இல்லாத ஒரு நடுத்தர வீட்டு பையனாக மஹேந்திரன் நடித்துள்ளார். ஆனால் இன்னும் பள்ளி மாணவராக நடிப்பை மட்டும் தவிர்க்கலாம்.  ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் கோபக்கார இளைஞனான நடித்துள்ளார்.  சண்டை காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  ஹீரோயின் அதிரா ராஜ் ஒரு சோகமான கடந்த காலத்துடன் மஹேந்திரன் பணிபுரியும் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார்.  ருத்ரா சிறைக்குச் செல்லும்போது, ​​யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து நின்று அவனை வெளியேற்றுகிறாள்.  கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் படம் முழுக்க வரும் படி அமைத்துள்ளனர்.  


இவர்களுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் ஜிஎம் சுந்தர் நடித்துள்ளார். படத்தில் நன்றாக எழுதப்பட்டு இருந்த கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர்.  ஆரம்பம் முதல் இறுதி வரை அதனை சரியாக பயன்படுத்தி நடித்துள்ளார்.  இப்படி ஒரு கேங்ஸ்டர் கதையில் ஹீரோவை முன்னிலை படுத்தி அவர் செய்வது எல்லாம் சரி என்று கதையை கொண்டு போகாமல் இருந்த இயக்குனர் பிரசாந்த் நாகராஜனுக்கு தனி பாராட்டுக்கள்.  மிக சாதாரண வாழ்க்கையிலிருந்து ஒரு கேங்ஸ்டராக மாறும் இளைஞர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுகிறார்.  மேலும் ஒருவர் செய்யும் தவறுக்கு முதல் காரணமாக அமைவது போதை தான் என்பதை எடுத்து கூறி உள்ளார்.  


படத்தின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை என்றாலும், உறுத்தலாக இல்லை.  மேலும் வில்லன் கதாபாத்திரதத்தில் நடித்து இருந்தவர்களும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். படத்தின் ரன் டைம் கூடுதல் பலம்.  தேவையில்லாத காட்சிகளை அவர்களே வெட்டி தூக்கி உள்ளனர்.  இருந்தாலும் சில இடங்களில் படம் மெதுவாக நகர்கிறது.  காரணம் திரைக்கதையில் உள்ள சொதப்பல்கள் தான். அதை சரி செய்து இருந்தால் தமிழ் சினிமாவில் வந்த குறிப்பிடத்தக்க நல்ல படமாக அமைந்து இருக்கும்.


மேலும் படிக்க | இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்கள்! டாப்பில் விஜய்யின் படம்..முழு லிஸ்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ