OTT Release: மார்ச் 27 அன்று பிளாக்பஸ்டர் 'லவ்வர்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!

Disney + Hotstar Release Lover Movie : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2024, 01:21 PM IST
  • டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் அப்டேட்
  • நடிகர் மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்
  • மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் ஆகும் லவ்வர் திரைப்படம்
OTT Release: மார்ச் 27 அன்று பிளாக்பஸ்டர் 'லவ்வர்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்! title=

Lover Movie OTT Relase Update : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில்  நடித்துள்ள இப்படம்,  தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை வித்தியாசமான பார்வையில் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இதற்கு முன் மிகச் சில தமிழ்ப் படங்கள் மட்டுமே பேசிய, உறவுகளின் பின்னால் உள்ள சிக்கல்களை லவ்வர் திரைப்படம்  பேசுகிறது.

காதலில் ஒருவருக்கு இன்னொருவர் மேல் ஏற்படும் சந்தேகம், மற்றவருக்கு எப்படி மன உளைச்சலாக மாறும், மற்றும் அது உறவை எப்படி சுமையாக மாற்றும் என்பதை இப்படம் காட்டுகிறது. காதலில் ஆதிக்கம் எப்படி உறவை நச்சுத்தன்மையுடையதாக மாற்றும் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் படிக்க | பிரபல பத்திரிக்கையாளரை கிழித்து தொங்கவிட்ட 96 பட இயக்குனர் பிரேம்குமார்!

குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனம் மீண்டும் மணிகண்டனை வைத்து தயாரித்த திரைப்படமான லவ்வர், கடந்த 9 ஆம் தேதி வெளியாது. இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டனுடன் இந்த படத்தில் ஸ்ரீ கெளரி பிரியா இணையாக நடித்திருந்திருந்தார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்தது என்பதால், ஓடிடியில் அதிக அளவில் இந்தப் படம் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டன், நாயகி ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோருடன், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிண்டு பாண்டு மற்றும் அருணாசலேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லவ்வர் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 27 முதல் லவ்வர் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | அம்பானி - டிஸ்னி டீல் ஓகே... நீட்டா அம்பானிக்கு மிகப்பெரிய பொறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News