தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஒரு வாரம் இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜுன் 28ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் இருந்து சென்னையில் மீனா வீட்டில் நடைபெற்ற இறுதி சடங்கு நிகழ்வுகளில் விவரங்கள் கலந்து கொண்டு வித்தியாசகருக்கு அஞ்சலி செலுத்தினர் மேலும் மே 29ஆம் தேதி மாலை இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. 



இதனை தொடர்ந்து மீனா தனதுவெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்," என்னுடைய கணவரின் மறைவால் நான் மிகுந்த சோகத்தில் உள்ளேன். அதனால் அனைத்து ஊடகங்களும் எனது தனியுரிமைக்கும் மதிப்பளியுங்கள்.


இதுகுறித்து மேலும் பொய்யான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இதுபோன்ற கடினமான சூழலில் எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் உறுதுணையாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



மேலும் படிக்க | தரையில் உண்டான விளைவு திரையில் இல்லை - ராக்கெட்ரி திரை விமர்சனம்


சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், நண்பர்கள், குடும்பத்தினர்கள், ஊடகத்தினர்கள் மற்றும் என் அன்பான ரசிகர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe