மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 


ரங்கநாயகி வெற்றி ஏற்கனவே எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டதாக பூஜாவுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, ரோஹித்தும் பூஜாவும் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வருகின்றனர். பூஜா வேறு வழியின்றி ரோஹித்துடன் ரங்கநாயகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றாள்.


அடுத்ததாக சக்தி அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து ரோகித்திற்கு ஊட்டி விட சொல்லி சக்தியும் வெற்றியும் சேர்ந்து பூஜாவை வெறுப்பேற்றுகின்றனர். 


அதுமட்டுமல்லாமல் ரோஹித் மற்றும் பூஜாவிற்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் உச்சகட்ட கடுப்பாகும் பூஜா என்ன செய்வது என்று சரளாவுடன் சேர்ந்து திட்டமிடுகின்றாள். 


நேற்றைய எபிசோடில், மணமேடையில் வெற்றி அமர்ந்திருக்க ரங்கநாயகி சீக்கிரம் என்று அவசரப்படுத்த சரளா மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்குவதற்கு செல்ல, சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறாள். 


சத்தி நிலையை பார்த்து சரண்யாவும் பதட்டத்தில் இருக்க வெற்றி மணமடையிலிருந்து எழுந்து கொள்ள பூஜா வெற்றியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஊர் மக்களிடம் பத்திரத்தை காட்ட அதில் வெற்றி சக்தி விவாகரத்தானதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.


மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!


பிறகு ஆசீர்வாதம் வாங்கி வந்த மாங்கல்யத்தை சரளா கொடுக்க வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்ட சக்தி, விரத்தியுடன் பார்க்கிறாள். ஜோதிடர் வெற்றிக்கு இரண்டு கல்யாணம் நடக்கும் என்று சொன்னதை யோசித்து பார்க்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?


மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ