காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

Yogi Babu Untouchability Viral Video: பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சமீபத்தில் ஒரு பிரசித்து பெற்ற முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்பாேது அவருக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 9, 2023, 08:37 AM IST
  • நடிகர் யோகி பாபு தற்போது பல படங்களி காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
  • சமீபத்தில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார்.
  • அங்கு இவருக்கு தீண்டாமை கொடுமை நடந்ததாக தகவல்கள் பரவியது.
காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!  title=

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார், யோகி பாபு. இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சமீபத்தில் இவர் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி தீயாக பரவி வருகிறது. 

யோகி பாபு:

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் பங்கு பெரும் முக்கிய நடிகராக மாறிவிட்டார் யோகி பாபு. இந்தி நடிகர் ஷாருக்கானில் இருந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலருடன் நடித்து விட்டார் யோகி பாபு. ஆரம்பத்தில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராகவும் கூட்டத்தில் ஒருவராகவும் இருந்தார். கலகலகப்பு படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பெரிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு இவரை பலரும் ‘பன்னி மூஞ்சி வாயன்’ நடிகர் என்று அழைத்தனர். கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் உருவ கேலி, தன் தோற்றம் குறித்து பேசி மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘பொம்மை நாயகி’ படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.

மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?

கடவுள் நம்பிக்கை:

நடிகர் யோகி பாபவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பட ரிலீஸிற்கு முன்னர் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவது இவரது வழக்கம். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் ‘யானை முகத்தான்’ என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இவர் விநாயகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரும் கோவிலிற்கு சென்றிருந்தார். அந்த வகையில் இவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். 

தீண்டாமை கொடுமை:

நடிகர் யோகி பாபு, சிறுவாபுரி கோயிலுக்கு சென்று அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பினார். அப்பாேது அவர் கழுத்து நிறைய மாலை இருந்தது. கோயில் பிரகாரத்திற்குள் நடந்த வந்த அவர், அந்த கோயிலில் இருந்த குருக்களை பார்த்தவுடன் கை குலுக்குவதற்காக கை நீட்டினார். ஆனால் அந்த குருக்கள், கையை ஆசிர்வாதம் செய்யும் நிலையிலேயே வைத்து யோகி பாபுவை ஆசிர்வதித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

கொந்தளித்த நெட்டிசன்கள்:

யோகி பாபு கோயிலுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் பேசு பொருளாக மாறினது. தமிழகத்தை பொருத்த வரை, சாதிய ரீதியிலான அடக்குமுறைகளும் தீண்டாமை குறித்த விஷயங்களும் பொருத்துக்கொள்ள படுவதில்லை. இந்த நிலைமை அனைவரும் அறிந்த ஒரு நடிகருக்கே வந்துவிட்டது எனக்கருதிய ரசிகர்கள் ட்விட்டரில் அந்த குருக்களை திட்டியும், குறிப்பிட்ட ஒர சாதியினரை திட்டியும் மீம்ஸ்களை பறக்க விட்டனர். இது கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும் மேலாக திரையுலகின் ஹாட் டாப்பிக்காக இருந்தது. 

யோகி பாபு விளக்கம்:

நடிகர் யோகி பாபு, இந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், “கோயில் குருக்களால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை..” என்று கூறியிருக்கிறார். தான் பைக் வாங்கிய காலத்திலிருந்தே அந்த குருக்கதான் பைக் வாங்கிய காலத்தில் இருந்து 12 வருடஞ்களுக்கு மேலாக சிறுவாபுரி கோயிலுக்கு சென்று வருவதாகவும் அப்போதில் இருந்தே அந்த குருக்களை தனக்கு தெரியும் என்றும் யோகி பாபு குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த குருக்கல் மிகவும் நல்ல மனிதர் என்றும் வேண்டுமென்றே யாரோ இவ்வாறான விஷயங்களஒ பரப்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அது மட்டுமன்றி இந்த வீடியோ ஒன்றரை மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அந்த குருக்களால் தனக்கு எந்த தீண்டாமையும் நேரவில்லை என்றும் அவர் தன் விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News