நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். படம், நாளை (ஆக., 10) வெளியாகிறது. இந்த நிலையில், இதனுடன் சேர்ந்து வெளியாக இருந்த மலையாள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர்:
ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர், நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் ஜெயிலர். இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில கோலாகலமாக நடைப்பெற்றது. பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | வித்யுத் ஜம்வாலின் உள்ளாடை விளம்பரத்திற்கான முதல் ஆடிஷன் வீடியோ வைரல் -Watch
மலையாள ஜெயிலர் திரைப்படம்:
தமிழில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவான போது, மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் உருவானது. மலையாளத்தில் உருவான அந்த ஜெயிலர் திரைப்படமும் ரஜினிகாந்தின் படம் வெளியாகவுள்ள ஆகஸ்டு 10ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயிலர் அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படாத அந்த படத்தினை சக்கீர் மடத்தில் என்ற இயக்குநர் எடுத்திருந்தார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மலையாள ‘ஜெயிலர்’ படக்குழுவினருக்கும் தமிழ் ‘ஜெயிலர்’ படக்குழுவினருக்கும் பஞ்சாயத்தானது.
படத்தின் பெயரை மாற்றக்கோரி போராட்டம்:
மலையாள ஜெயிலர் படத்தின் இயக்குநர் சக்கீர் மடத்தில், தமிழ் ஜெயிலர் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தன் படத்திற்காக போராடி வந்தார். கேரளாவில் தமிழ் ஜெயிலர் படத்தை பெயர் மாற்றம் செய்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், இதனால் தன் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் பல முறை ஊடகத்தின் வாயிலாக சொல்லி பார்த்தார். கேரளாவில் உள்ள திரையரங்குகள் தமிழ் ஜெயிலர் படத்திற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தன் படத்திற்கும் ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்னர் போராட்டங்களையும் நடத்தினார். இந்த படத்தை நம்பிதான் தனது வாழ்க்கை இருப்பதாகவும் அவர் கூறிப்பார்த்தார். ஆனால் எதற்குமே தமிழ் ஜெயிலர் படக்குழு அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் தன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட முடிவு செய்து இருக்கிறார்.
ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு:
மலையாள ஜெயிலர் திரைப்படம் தமிழ் ஜெயிலர் திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஜெயிலர் படம் திட்டமிட்டது போலவே நாளை (ஆக., 10ஆம் தேதி) தமிழ்நாடு, கேரளா உள்பட சில மாநிங்களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம், இம்மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகள் முன்பதிவு:
ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் மட்டும் 4.1கோடி ரூபாய் அளவிற்கு ‘ஜெயிலர்’ படத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில், 8.80 கோடி ரூபாய் அளவிற்கு டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் எப்படியிருக்குமோ என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ