தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சித்தாள்கள் தங்களை தூங்க விடாமல் டார்ச்சர் பண்ணியதை பூஜா நிரூபிப்பதற்காக தன் அறைக்கு ரங்கநாயகியை அழைத்துச் செல்ல இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, பூஜா சொன்னது போல அங்கே சித்தாள்கள் தங்கியதற்கான தடயமே இல்லை. ரங்கநாயகி பூஜாவிடம் சக்தியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ குழப்பாதே என்று சொல்லி திட்டுகிறாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சீதா ராமன்: கர்ப்பமான சீதா.. மகாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மந்திரவாதி


பிறகு யமுனா கார்த்திக்கிற்கு போன் செய்து நான் உங்களை உடனே பார்த்தாக வேண்டும் என்று சொல்ல, அவன் தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல, யாரு உங்க போன்ல பேசினது என்று யமுனா கேட்க, தன்னை சந்தேகப்படுவதாக நினைக்கும் கார்த்திக் கோபத்தில் போனை கட் செய்து விடுகிறான்.  அடுத்து வரும் வழியில் பிரியா பிய்ந்து போன செருப்புடன் நிற்க, வழியில் என்னை டிராப் செய்யுங்கள் என்று பிரியா சொல்கிறாள். வேறு வழியின்றி கார்த்திக் அவளை தன் பைக்கில் அழைத்துப் போகிறான். அதை யமுனா பார்த்து விடுகிறாள். இதனால் டென்ஷன் ஆகிறாள். பிரியா வேண்டுமென்றே கார்த்திக்கின் மேல் கை வைத்துக் கொண்டு பைக்கில் போக யமுனா அதிர்ச்சியாகிறாள்.



பூஜா பிரியாவுக்கு போன் செய்து நாளை காலை 9:00 மணிக்கு கோவிலில் இருக்க வேண்டும், கார்த்திக்கும் வருவான், யமுனாவும் வருவாள் என்று சொல்லுகிறாள். ரங்கநாயகி கோகிலாவிடம் நாளை காலை கார்த்திக்கை 9 மணிக்கு கோவிலுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறாள்.  மறுநாள் கார்த்திக்கும். பிரியாவும் கோவிலில் தற்செயலாக சந்தித்து கொள்கிறார்கள். பூஜா யமுனாவைப் பார்த்து, கோவிலில் கார்த்திக்குடன் வேறு ஒரு பெண்ணை பார்த்தேன் என்று சொல்ல, யமுனா கோவிலுக்கு ஓடுகிறாள். அங்கே பிரியாவையும் கார்த்திக்கையும் பார்க்கும் யமுனா கோபமாகி கார்த்திக்கிடம் சண்டை போட, கார்த்திக் கோபமாகி அவளைத் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து போய் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ