மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனாட்சி பொண்ணுங்க செப்டம்பர் 9 எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மாறுவேடத்தில் வந்திருப்பது யமுனாவுக்கு தெரியவந்து அவனை திட்டி அனுப்புகிறார்.


அப்போது, அங்குக் வரும் கார்த்திக்கின் அப்பா, வீட்டுக்கு வருமாறு கூப்பிடுகிறார். ஆனால், கார்த்திக் நான் யமுனாவுடன் தான் வாழ்வேன், வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னதும், அவர் அவனை அறைந்து விட்டு கிளம்பி செல்கிறார். 


மேலும் படிக்க | புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்யின் லியோ ! வெளியீட்டுக்கு முன்னரே மாபெரும் சாதனை 


பிறகு கார்த்திக் நாளைக்கு 6:00 மணிக்குள் நீ என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல பிறகு பெரியவர் ஒருவர் வந்து மெஸ்ஸில் வேலை செய்த பெரியவர் போல் ஒருவர் பஸ்ஸில் அடிபட்டு விழுந்நு விட்டார் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


அடுத்ததாக யமுனா பதட்டத்தோடு ஹாஸ்பிடலுக்கு வந்து விசாரிக்க அவர் ஸ்பாட் அவுட் என்று சொல்லி பாடியை அடையாளம் காட்ட சொல்லி அழைத்துச் செல்ல யமுனா கண்ணீரோடு சென்று பார்க்க அது கார்த்திக் இல்லை என தெரிய வருகிறது. 



யமுனா வெளியே வர எதிரே கார்த்திக் வந்து இப்போதாவது என்னை ஏற்றுக் கொள் என்று சொல்ல இனி முடிவு என்னிடம் இல்லை மீனாட்சியிடம் பேசிக் கொள்ளுங்கள் என சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | “இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ