“இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா?

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 6, 2023, 11:43 AM IST
  • விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக தீயாய் பரவிய செய்தி.
  • அதற்கு என்ன காரணம்?
  • என்ன நடந்தது?
“இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா?  title=

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் தனித்தனியாக வெளியிட்ட புகைப்படங்களை சேர்த்து வைத்து, ஒரே இடத்தில் எடுத்தது போல இருப்பதாகவும், இருவரும் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும் ரசிகர்கள் தற்போது கிசுகிசுத்து வருகிறார்கள். அந்த பேக் கிரவுண்ட் இருக்கும் இடம் ஹைதராபாத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் வீடு தான். 

இந்த புகைப்படங்கள் தான் இவர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் இவர்களை ட்ரெண்ட் ஆக்க காரணமாக அமைந்துள்ளது.

இது போல ரசிகர்கள் ஆதாரங்களை வெளியிடுவது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜனவரி 1-ம் தேதி இருவரும் இணைந்து புத்தாண்டை கொண்டாடியதாக சில புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டிருந்தனர்.

அப்போதும் ஒரே இடத்தில் இவர்கள் தனித்தனியாக போட்டோக்களை வெளியிட்டதாக பேசப்பட்டது. 

மேலும் படிக்க | இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

ஒரு முறை ஹாலிடேவுக்கு விஜய் தேவரகொண்டா சென்ற போது அணிந்திருந்த கூலர்ஸ் போல ராஷ்மிகாவும் ஒரு கூலர்ஸ் அணிந்து போட்டோ வெளியிட்டார். எப்படா இவர்கள் சிக்குவார்கள் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தாங்க என அவர்களே அவ்வப்போது சில விஷயங்களை செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு ரசிகர் இந்த இரு படங்களை சேர்த்து ட்வீட் செய்து இப்போது புதிய ஒரு விஷயத்தை பரப்பி வருகிறார்.

இதெல்லாம் போதாதென்று சமீபத்தில் விஜய் தேவரகொண்ட தனது இன்ஸ்டாவில், ”நிறைய நடக்கிறது. ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷல். விரைவில் அறிவிக்கிறேன்” என போஸ்ட் செய்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அதில் இவர் ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போல புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

குஷி ரிலீஸ் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால், பலரும் இவர் சமந்தாவை காதலிப்பதாக கூறினர். ஆனால் இப்போது மீண்டும் ராஷ்மிகா தான் சிக்கியுள்ளார். உண்மையில் விஜய் காதலிப்பது யாரை என்பதை அவரே சொன்னால் தான் தெரியும்.

மேலும் படிக்க | அனிருத்துக்கு கலாநிதி மாறன் கொடுத்த காரின் விலை என்ன தெரியுமா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News