தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் தான் தன்னை தானே சூப்பார் மாடல் என கூறும் மீரா மிதுன் (Meera Mitun). இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் கோபமடைந்த பிரபல ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் (Social Media) கடுமையாக வசைபாடி வருக்கின்றனர் நெட்டிசன்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாடலிங் துறையிலிருந்து மீரா மிதுன் (Meera Mithun) தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்ச்சையான கருத்துக்கள் கூறுவதும், நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு கூறுவதும், அதனால் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல. 


ALSO READ | Kajal Aggarwal வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: காஜலுக்கு twin sister உள்ளாரா?


இந்த நிலையில் தற்போது நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் சரசையான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை குறித்து சர்ச்சையாக பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் கூறியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். 


தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், பல்வேறு கட்சியினர் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தனர்.


இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சாதிய ரீlதியாக பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை கூறியுள்ளது.


ALSO READ | என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR