என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன்..!

Written by - ZEE Bureau | Last Updated : Feb 15, 2021, 10:08 AM IST
என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன்..!

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் தான் தன்னை தானே சூப்பார் மாடல் என கூறும் மீரா மிதுன் (Meera Mitun). இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் கோபமடைந்த பிரபல ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் (Social Media) கடுமையாக வசைபாடி வருக்கின்றனர் நெட்டிசன்கள். 

மாடலிங் துறையிலிருந்து மீரா மிதுன் தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக ட்விட்டரில் பிரதமர் மோடியை (Narendra Modi) டேக் செய்துள்ளார். அதில் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு (Suicide) காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்" என பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

ALSO READ | Kajal Aggarwal வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: காஜலுக்கு twin sister உள்ளாரா?

மேலும் இவரின் இந்த பதிவை சிலர் கலாய்த்து வருகின்றனர். அந்த பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மீரா, சென்னை கமிஷ்னர் மகேஷ் அகர்வாலையும் டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.

இதையடுத்து பிப்ரவரி 12 ஆம் தேதி மீரா மிதுன் தனது Youtube பக்கத்தில் 'depression'என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில்  ’நான் இதுவரை செய்த வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் எனக்கு எதுவும் செய்ய பிடிக்கவில்லை. உங்க எல்லார் மேலையும் என்னால வழக்கு போட முடியும். என் மூஞ்சிய எல்லாரும் திருடிட்டு இருக்காங்க. அதனால் என் மூஞ்சிய நான் வெறுக்குற நிலைமைக்கு வந்துட்டேன்’ எனக் கூறி அந்த வீடியோவில் கதறி அழுதுள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News