ரசிகர்களிடம் கலாய் வாங்கிய துர்கா செகண்ட் லுக்
ராகவாலாரன்ஸின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் துர்கா என்ற படத்தை தயாரிக்கிறது.
நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக திறமை கொண்டவர் ராகவாலாரன்ஸ். பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நேற்று மாலை திடீரென துர்கா என்ற தலைப்பு கொண்ட தனது அடுத்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். மொட்டைத் தலையுடன் நீண்ட வெள்ளை நிற தாடி நெற்றியில் பட்டை என திகிலாக இருந்தது அந்த பஸ்ட் லுக் போஸ்டர்.
ராகவா லாரன்ஸின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் பற்றிய தகவல் எதுவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெறவில்லை. ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பேய் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். துர்காவும் அதேபோன்ற காமெடி, சென்டிமெண்ட் கலந்த காஞ்சனா பட வரிசையில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை லாரன்ஸ் இயக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
ALSO READ | படப்பிடிப்பில் காயமடைந்த சேரன் - தலையில் 8 தையல்கள் - மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் துர்கா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து என்ன செய்வது என்று குழப்பத்திலிருந்த ரசிகர்களுக்கு, செகண்ட் லுக் போஸ்டர் மீம் மெட்டீரியல் ஆக மாறியது. மொபைலில் செல்பி எடுத்த புகைப்படத்தை செகண்ட் லுக் போஸ்டர் என ரிலீஸ் செய்து விட்டார் என்று சமூக வலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் கலாய்த்து மீம்ஸ்களை பதிவேற்றி வருகின்றனர்.
தற்போது ராகவா லாரன்ஸ் ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். தனது தம்பி எல்வினை நாயகனாக அறிமுகப்படுத்த சரியான கதைகளை கேட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ்.
ALSO READ | AV33: 13 வருடங்களுக்கு பின் இணையும் ஹரி – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR