மெர்சல்: ‘நீதானே’ மற்றும் ‘மெர்சல் அரசன்’ பாடல்கள் வெளியானது!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று மாலை 4 மணியளவில் வெளியானது.
மேலும் இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாகிறது.