திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவது வழக்கமான ஒன்று.  அந்த பிரபலங்களை பிடிக்காதவர்கள் அவர்கள் செய்யும் சில விஷயங்களை கேலி செய்யும் விதமாக ட்ரோல் செய்வார்கள்.  ஆனால் இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று அந்த நபர் இறந்துவிட்டதாகவும் சில வதந்திகளை பரப்பி விடுவார்கள்.  அந்த வகையில் மியா கலீஃபா இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் தீயாய் பரவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?


மியா கலீஃபாவின் இறப்பு செய்தியை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை நினைத்து கவலைப்பட்டனர். இந்நிலையில் மியா கலீஃபா அவரது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவை அளிக்கக்கூடிய மீம் ஒன்றைப் பதிவு செய்தார். அவர் பதிவிட்டிருந்த மீமில் “நான் இன்னும் இறக்கவில்லை, நான் நலமுடன் இருப்பதாய் உணர்கிறேன்" என்ற வாசகம் இருந்தது.



இந்த வதந்தி எப்படி பரவியது என்றால் அவரது பேஸ்புக் ப்ரொஃபைலில் அவரது பெயருக்கு மேலே 'Remembering' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்தது.  மேலும் அதில், "மியா கலீஃபாவை நேசிக்கும் நபர்கள் அவரது ப்ரோபைலை பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுடைய வாழ்க்கையை நினைத்து கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.



இவர் முன்னர் BBCக்கு அளித்த பேட்டியொன்றில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சில முக்கியமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.  அதில், “சுயமரியாதை பாகுபாடு காட்டுகிறது என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.  நீங்கள் எவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்தும் அல்லது எவ்வளவு பெரிய பின்னணியில் இருந்து வந்தாலும் பரவாயில்லை.  நான் குழந்தையாக இருந்தபோது என் உடல் எடையுடன் நான் தொடர்ந்து போராடினேன், ஆண்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் நான் ஒருபோதும் நினைத்ததில்லை.  நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்பொழுது சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் எனது உடல் எடையை குறைக்க தொடங்கினேன்.  நான் படித்து முடித்து பட்டம் வாங்குவதற்குள் என் உடலில் பெரிய மாற்றம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் என்றார்.


 



மேலும் அவர் கூறுகையில், எனது உடல் எடை குறைப்பின் போது நான் எனது மார்பகத்தைப் பற்றி  அதிக கவனம் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நான் 50 பவுண்டுகள் எடை இழந்தேன், இதனை செய்த பிறகு அதிகமான ஆண்களிடமிருந்து கவன ஈர்ப்பை நான் பெற ஆரம்பித்தேன், ஆனால் அதனை நான் ஒருபோதும்  அதை பயன்படுத்தவில்லை, நான் என்ன செய்ய வேண்டும், எனக்கு தேவையானது எது என்பதை பற்றி தான் நான் நினைத்தேன் என்று கூறினார்.


ALSO READ | சித் ஸ்ரீராமை புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR