சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'புஷ்பா' (Pushpa). இப்படத்தில் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
ALSO READ | Oo Antava Mama; வைரல் ஆகும் கிலி பால் version வீடியோ
இப்படத்தை விட இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா (Samantha) 'ஊ சொல்றியா மாமா' என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இந்த பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை பெற்றது, இன்றுவரை பலரது காதுகளிலும் இந்த பாடல் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த பாடல்களுக்கு ஆண்கள் தரப்பிலிருந்து சில கிளம்பினாலும், இந்த பாடலுக்கு ஒரு புறம் வரவேற்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது.
அதேபோல 'வாயா சாமி' மற்றும் 'ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'ஸ்ரீவல்லி' பாடலை பாடிய சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்வில் 'ஸ்ரீவல்லி' பாடலை மேடையில் பாட தொடங்கினார். அவரது குரலுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசிக்கப்படும் என்று நான் ஆர்வமுடன் காத்திருந்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் பின்னணியில் இசைக்கப்படவில்லை, அவர் குரல் மட்டுமே ஒலித்தது. எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடியதை கேட்டு நான் அந்த இசை வெள்ளத்தில் மிதந்தேன். இவர் குரலில் ஏதோ மாயம் உள்ளது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. இவருக்கு இசை தேவையில்லை, இவரே ஒரு இசைதான்" என்று புகழ்ந்து பதிவிட்டு இருந்தார்.
@sidsriram pic.twitter.com/TIKQr4PHAC
— Allu Arjun (@alluarjun) January 29, 2022
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாடகர் சித் ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுனின் பதிவை பகிர்ந்து கொண்டதுடன், 'என்னுடைய அதீத அனபை உங்களுக்கு தருகிறேன், உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள், இவ்வளவு பெரிய மனிதர் என்னை பற்றி பெருமையாக கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
Brother I am beyond humbled. So much love to you, you are a legend and these words mean the world to me! https://t.co/gnb08aXPUO
— Sid Sriram (@sidsriram) January 29, 2022
ALSO READ | 'புஷ்பா' பிடியில் சிக்கிய வார்னர்: வைரல் ஆகும் வேற லெவல் ஆக்ஷன் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR