கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயவாடாவில் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா போன்ற பலர் கலந்துகொண்டனர்.  என்.டி.ராமராவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை பற்றி புகழ்ந்து கூறினார், ரஜினியின் புகழாரத்தை கேட்டு ஆத்திரமடைந்த முன்னாள் நடிகையும், ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆர்.கே.ரோஜா தனது வார்த்தைகளால் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஜினிகாந்த் பேசுகையில், "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி.  அவரது தொலைநோக்கு பார்வையால் தான் ஹைதராபாத் இன்று வளர்ச்சியடைந்துள்ளது, ஹைதராபாத் இன்று நியூயார்க் போல உள்ளது.  சொர்க்கத்தில் இருந்து என்.டி.ஆர், சந்திரபாபு நாயுடுக்கு ஆசிகளை வழங்குகிறார் " என்று சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து தள்ளினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இவ்வளவு சீக்கிரம் ஓடிடியில் வெளியாகிறதா பொன்னியின் செல்வன் 2? ரிலீஸ் தேதி இதோ!


ரஜினிகாந்தின் புகழாரத்தை கேட்டு என்.டிஆரின் ஆதரவாளர்கள் அனைவரும் கடும் கோபமடைந்துள்ளனர்.  இவர்களைவிட அமைச்சர் ரோஜா ஒருபடி மேலே சென்று வார்த்தைகளால் ரஜினிகாந்தை விளாசியுள்ளார்.  ரஜினிகாந்த் பற்றி ரோஜா பேசுகையில், என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது சிரிப்பை வரவழைத்துள்ளது.  ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் 2003-ம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது, இந்த இருபது ஆண்டுகளில் தான் ஹைதராபாத் இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது.  அப்படி இருக்கையில் ஆட்சியில் இல்லாத சந்திரபாபு நாயுடு எப்படி ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார்.  முதுகில் குத்தியவனை எப்படி என்.டி.ஆர் ஆசீர்வதிப்பார்? ரஜினிகாந்த் உண்மை தெரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை.  என்.டி.ஆரின் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.  பிரதமராக ஆக வேண்டியவரை தனது சூழ்ச்சியால் வீழ்த்தி, அவரது ஆதரவாளர்களையே அவருக்கு எதிராக திருப்பி பதவியை இழக்க வைத்தது சந்திரபாபு நாயுடு தான் என்று கூறினார்.


மேலும் பேசியவர், தனது மருமகன் சந்திரபாபு நாயுடு ஒரு திருடன், அவனை யாரும் நம்ப வேண்டாம் என்று என்.டிஆர் கூறியிருந்தார்.  இதெல்லாம் ரஜினிகாந்துக்கு தெரியாதா? வேண்டுமென்றால் என்.டி.ஆர் பேசிய சிடி என்னிடம் உள்ளது, அதை ரஜினிகாந்திற்கு அனுப்பி வைக்கிறேன், அதை பார்த்து அவர் தெரிந்துகொள்ளட்டும்.  ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார், அப்படி இருக்கையில் அவர் அரசியல் பேசவேகூடாது.  இதுவரை தெலுங்கு ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த், சந்திரபாபுவை புகழ்ந்து பேசி பூஜ்ஜியமாக மாறிவிட்டார்.  ரஜினியை உயர்வாக கற்பனை செய்து வைத்திருந்தோம், ஆனால் அவரது பேச்சு அவரை பூஜ்ஜியமாக்கி விட்டது.  இப்படி பேசியதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை, அவர் நலனுக்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டேன் என்று கடுமையாக ரஜினிகாந்தை அமைச்சர் ரோஜா சாடியுள்ளார்.  அமைச்சர் ரோஜா மட்டுமில்லாமல், யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சியின் (ஒய்.எஸ்.ஆர்.சி.பி.) மற்ற தலைவர்களும் சந்திரபாபு நாயுடுவை, ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பெரிய நடிகர், சந்திரபாபு நாயுடுவை ஆதரித்துபேசியது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | வந்துவிட்டது ஏகே 62 அப்டேட்... மகிழ் திருமேனி இயக்கும் படத்திற்கு இதுதான் பெயர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ