ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மிஷன் சாப்டர் 1. இந்த படத்திற்கு முதலில் அச்சம் என்பது இல்லை என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு பான் இந்தியா வெளியீட்டிற்காக தலைப்பை மாற்றினர். இந்த படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா, பரத் போபன்னா, பேபி இயல் போன்றோர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் தொடக்கத்தில் அருண் விஜய் தன்னிடம் உள்ள அனைத்து பொருட்களையும் விற்று பணம் சேர்த்து வருகிறார். அவரின் மகளுக்கு லண்டனில் ஆபரேஷன் செய்ய 30 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த பணத்தை ஹவாலா மூலம் லண்டனுக்கு மாற்றுகிறார். இங்கிருந்து அவரிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டு கொடுக்கப்படுகிறது. அதனை லண்டனில் உள்ளவரிடம் கொடுத்தால் பணம் அவருக்கு கிடைக்கும். இந்த விஷத்தை தெரிந்து கொண்ட ஒரு கும்பல் லண்டனில் அவரிடம் இருந்து அந்த 10 ரூபாய் நோட்டை பறிக்க முயற்சி செய்கிறது. ரவுடி கும்பலுடன் அருண் விஜய் சண்டை போட லண்டன் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்நிலையில், அவரது மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா? உண்மையில் அருண் விஜய் யார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே மிஷன் சாப்டர் 1 படத்தின் கதை.


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?


அருண் விஜய்க்காகவே எழுதப்பட்ட கதை போல் இருந்தது இந்த மிஷன் சாப்டர் 1. 50 பேரை ஒரே சமயத்தில் அடிக்கிறார் என்றாலும் அது நம்பும்படியாக இருந்தது, அதற்கு காரணம் அவரின் உடல் அமைப்பு தான். ஆக்சன், எமோஷனல் என தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். தனது மகளுக்காக அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்கள் படத்தில் அழகாக காட்டப்பட்டிருந்தது. மதராசபட்டினம் படத்தில் ஒரு சாதுவான பெண்ணாக நடித்திருந்த எமி ஜாக்சன் இந்த படத்தில் பறந்து பறந்து சண்டை இடுகிறார். அருண் விஜய்யை தொடர்ந்து எமி ஜாக்சனும் ஆக்சன் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார். நிமிஷா சஜெயன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரத் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து உள்ளார்.


முதல் பாதி முழுக்கவே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஒரு பதட்டம் படம் பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது, அந்த அளவுக்கு திரைக்கதையை வலுவாக அமைத்துள்ளார் இயக்குனர் விஜய். குறிப்பாக இடைவேளியில் வரும் ட்விஸ்ட் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது. மேலும் லண்டன் சிறையும் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது, சென்னையில் தான் செட் போட்டு படத்தை எடுத்திருந்தனர். ஆனால் எங்குமே அது செட் என்பது நமக்கு தெரியவில்லை. இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ் பேக்கில் ஆரம்பிக்கிறது, அடுத்தடுத்து சண்டை காட்சிகளை வைத்து படம் நகர்ந்தாலும் ஒரு சில இடங்களில் அது சலிப்பை தட்டுகிறது. மேலும் அந்த சிறையில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளுமே நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது. 


படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளும் உள்ளது. அவ்வளவு பெரிய லண்டன் சிறையை தீவிரவாதிகள் மூன்று பேர் சேர்ந்து ஆக்கிரமிக்கின்றனர். மேலும் லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் ஒரு செக்யூரிட்டி கூட இல்லை என்பது போல் காட்டியுள்ளனர். இவை எல்லாம் படம் பார்க்கும்போது அப்பட்டமாக தெரிகிறது. ஜிவி பிரகாஷ் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. மிஷன் சாப்டர் 1 படத்தை நிச்சயம் குடும்பங்களுடன் சேர்ந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | Dhanush: பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தனுஷின் படங்கள்! லிஸ்டில் ‘கேப்டன் மில்லர்’ இடம்பெறுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ