மோடியை முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும் - இயக்குநர் பேரரசு
இளையராஜாவின் ஒரு கருத்து சர்ச்சையாகி, பின்னர் பாக்யராஜ், யுவன் தொட்டு தற்போது பேரரசுவில் வந்து நிற்கிறது.
சில தினங்களுக்கு முன் மோடி குறித்த ஒரு புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை இணையத்தில் வைரல் ஆனது. “மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பெத்கர் பாராட்டியிருப்பார்” என்று இளையராஜா எழுதியிருந்தார். எதிரெதிர் கொள்கைகளில் இருப்பவர்களை எப்படி ஒப்பிட்டு எழுதலாம் என பல தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு சட்டை அணிந்து “Dark Dravidian, Proud Tamilan" என்று எழுதியிருந்தார். இளையராஜாவிற்கு தனது மகனிடம் இருந்தே எதிர்ப்பு வருகிறது என சமூக வலைதளம் பரபரப்பானது.
மேலும் படிக்க | கொலை மிரட்டலுக்கு நடிகர்களே காரணம்; விதை கமல் போட்டது - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டே நாட்களில் இயக்குநர் பாக்யராஜ், ”மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று விமர்சித்தார். உடல் ரீதியான தாக்குதலில் பாக்யராஜ் பேசியிருந்ததால் கண்டனக் குரலும் அதேசமயம் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களிடம் இருந்து எதிர்ப்புக் குரலும் கிளம்பியது. மேலும் ஏற்கனவே இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சாந்தனு இப்போது அவரது தந்தைக்கு எதிராகவே பேசுவார் என கேலிகளை பார்க்க முடிந்தது. ஆனால் ஒரே நாளில் பாக்யராஜ் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் பேரரசு வலதுசாரி ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், ”மோடியை அம்பெத்கருடன் ஒப்பிட்டதை விட, முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும்” என்று பேரரசு பேசியிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்கள் இருவரும்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கடைபிடிப்பவர்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | அப்பாக்களை வெச்சு செய்யும் மகன்கள் - இளையராஜா முதல் பாக்யராஜ் வரை
நாத்திகம் என்பது இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது அல்ல என்று பேரரசு பேசியிருக்கிறார். ஆத்திகன் என்றால் அனைத்து மதத்தையும் எதிர்க்க வேண்டும். அதுதான் ஆண்மகனுக்கு அழகு என்றார் பேரரசு. பக்தி இருந்தால்தான் ஒழுக்கம் வரும் என்றும் கூற்றை முன்வைத்திருக்கிறார். சினிமாத்துறையில் இருப்பவர்கள் அரசியல் பேசி சிக்கிக் கொள்வது சமீபத்தில் வாடிக்கையாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR