திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியல் பேசுவது அவ்வப்போது நடப்பதுதான் என்றாலும் அதற்கு எதிர்க் கருத்து வரும்பொது அந்த கூற்று கவனம் பெறுகிறது. அந்த எதிர்கருத்து சொந்த குடும்பத்தில் இருந்தே வந்தால் சுவாரஸியம் அதிகம் பெறுகிறது. அப்படியான சுவையான கதைதான் இந்த வாரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.
கடந்த வாரம் முழுக்க இளையராஜா எழுதிய ஒரு புத்தக உரை பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு காரணம் ராஜாவின் செய்தி வந்த சில தினங்களிலேயே யுவன் ஷங்கர் ராஜா செய்த ஒரு காரியம். “மோடியின் செயல்பாடுகளை பார்த்தால் அம்பேத்கரே பாராட்டுவார்” என்று இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதியிருந்தார். இந்த விவகாரம் கடுமையான அதிர்வலைகளை இணையத்தில் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி
அம்பேத்கரும் மோடியும் எதிரெதிர் கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களை எப்படி ஒப்பிடலாம் என்று பேசப்பட்டது. அடுத்த நாளே இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Black Dravidan, Proud Tamilan என்று கறுப்பு சட்டை அணிந்த படத்தை பதிந்திருந்தார். இது முழுக்க முழுக்க திராவிட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் இருந்தது. அப்பா ராஜா வலதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் மகன் யுவன் ஷங்கர் ராஜா திராவிட சித்தாந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரே என்று இணையம் சலசலத்தது.
இந்த நிலையில் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், “மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்றார். இவரும் வலதுசாரி ஆதரவாளரா என்று வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது மகன் சாந்தனுவின் முன்னாள் ட்விட்கள் சடசடவென வைரல் ஆனது. குறிப்பாக சாந்தனு மோடியை விமர்சித்திருக்கும் ட்விட் ஒன்றும் அவர் அணிந்திருந்த I am a தமிழ் பேசும் இந்தியன் டி-சர்ட் போட்டோவும் வைரல் ஆகிவருகிறது.
மேலும் படிக்க | எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி
அப்பாக்கள் இளையராஜாவும் பாக்யராஜும் மத்திய அரசுக்கும், பாஜக-வுக்கும் இணக்கமாக இருக்க நினைத்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், மகன்கள் யுவனும் சாந்தனுவும் திராவிட இயக்கங்களுக்கு இணக்கமாக இருப்பது விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews , ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
ஆண்ட்ராய்டு இணைப்பு - https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு - https://apple.co/3loQYeR