அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் மோகன்லாலின் 4 படங்கள்!
மோகன்லால் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அடுத்தடுத்து நான்கு படங்களும் OTT-யில் வெளியாக உள்ளன.
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல படங்கள் OTT-ல் ரிலீஸாகின. தியேட்டரில் வெளியாக இருந்த பல திரைப்படங்களும் OTT-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர், மோகன்லாலின் எதிர்வரும் 4 படங்களும் OTT-ல் வெளியாகும் என்று கூறி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார். மோகன்லால் நடிப்பில், ஆஷிர்வாத் தயாரிப்பில் உருவாகியுள்ள BRO DADDY, 12th MAN, ALONE, MARAKAYAR உள்ளிட்ட படங்கள் OTT-ல் வெளியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மோகன்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள திரையுலகிலேயே அதிகபட்ச பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இதில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பணி 2019-ம் ஆண்டிலேயே நிறைவு பெற்றாலும் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் செய்வதாக இருந்தும் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் 50% இருக்கைகளுக்கு தான் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்திற்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க இயலாது.
இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய நாங்கள் விரும்பினோம். ஆனால் எங்களது நிபந்தனைகளை தியேட்டர் ஓனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மோகன்லால் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடம் கலந்தாலோசித்து தான் இந்த முடிவிற்கு வந்தோம். இறுதியாக தியேட்டர் ஓனர்கள் எங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறிவிட்டனர். இதனால் நாங்கள் 'மரைக்காயர்' படம் மட்டுமல்லாது மோகன்லாலின் மற்ற படங்களையுமே OTT-ல் தான் ரிலீஸ் செய்யப்போகிறோம் என்று தெரிவித்தார்.
மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 திரைப்படமும் முன்னதாக OTT-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.
ALSO READ தோட்டாக்கள் தெறிக்க வெளியானது விக்ரம் படத்தின் First Glance!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR