இயக்குநர் ராம்தேவ் கதை, வசனம், எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மூன்றாம் மனிதன்’. கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இப்படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ரசிக்கும் படி இருந்தது.  இந்த படத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரணா, ஶ்ரீ நாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் முதன்மை கதாபாத்திரமாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.  படத்தின் ஆரம்பத்தில் சோனியா அகர்வாலின் கணவரை கடத்தி விட இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை பலவித சஸ்பென்ஸ்களுடன் சொல்லி இருக்கும் படம் தான் மூன்றாம் மனிதன்.  நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சோனியா அகர்வாலுக்கு இது ஒரு நல்ல படம் என்று சொல்லலாம்.  இந்த படத்தில் அவருக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.  அதை அவர் சிறப்பாக செய்துள்ளது.  இவருக்கு அடுத்து படத்தில் நன்றாக நடித்திருப்பது பாக்யராஜ் தான்.  சமீபத்தில் வெளியாகி ஹிட்டான டாடா படத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார்.


மேலும் படிக்க | பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள முதல் படம்! ரிலீஸ் எப்போது தெரியுமா?


இவர்களை தவிர பிரணா மற்றும் ஶ்ரீ நாத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர்.  மேலும் பிரணாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வித்தியாசமாவும் இருந்தது.  அதனை அவர் சிறப்பாகவே பண்ணி இருந்தார்.  சிறிய பட்ஜெட்டில் படம் உருவாகி இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.  குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஒரு கருத்தை, கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இயக்குநர் ராம்தேவ் சிறப்பாக சொல்லியிருக்கிறார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது.  கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும்.



முன்னதாக நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாக்யராஜ், "இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு ஒரு திறமை வேணும். இப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தது. படத்தின் ஓப்பணிங்கில் நானும் பிரணாவும் வருவோம் கிளைமாக்ஸ்சிலும் அப்படியே முடியும். கிரைம் சப்ஜெக்ட் என்றாலும் கிளைமாக்சில் சென்டிமென்ட்டாக முடியும் வகையில் கதை அமைத்திருக்கிறார்.  படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா என்று கேட்டால், மெசேஜ் இருக்கிறது. இதில் நடித்திருக்கும் பிரணா அவரது வயதுக்கு மீறிய பாத்திரம் ஏற்று செய்திருக்கிறார். அப்படி செய்வது ஒரு அனுபவம். பாலசந்தர் சாரின் மூன்று முடிச்சு படத்தில் ஶ்ரீ தேவி நடித்தபோது அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரத்தில் நடித்தார். இந்த அனுபவம் அவர்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்.


சோனியா அகர்வாலுடன் இரண்டு நாள்  இந்த படத்தில் நடித்தேன். அவர் வசனம் பேசும் போது சத்தமே  கேட்காது. ஆனால் லிப் மூவ்மென்ட்ஸ் சரியாக இருக்கும். ஶ்ரீநாத்தும்  முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்  அவர் டைரக்ஷன் செய்து கொண்டிருந்தார் இப்போது நடிக்க வந்து விட்டார். இந்த படத்தை பொறுத்தவரை நிறைய  டெக்னீஷியன்கள்  ஒத்துழைத்திருக்கிறார்கள் நிறைய பேர் படம் எடுப்பதற்கு  ரொம்ப சிரமப்படுவார்கள்.  படம் எடுத்துவிட்டு அதை ரிலீசுக்கு கொண்டு வருவது அதைவிட பெரிய  கஷ்டம் அந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள் தேங்கிக் கிடக்கிறது. ஆனால் இந்த படத்தை 29ம் தேதி வெளியீடு என்று இயக்குனர் ராம் தேவ் அறிவிப்பு கொடுத்து விட்டார். 


அதற்கு அவரது விடா முயற்சிதான் காரணம். எங்க இயக்குனர் பாரதிராஜா சார் என்ன எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பார். அதற்காக கடுமையாக உழைப்பார். அதேபோல் ராம் தேவும்  என்ன எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார். கடுமையாக,  சின்சியராக உழைப்பார். ஒரு சிலர் ஒரு நாள் இரண்டு நாள் கூடுதலாக எடுப்பார்கள். ராம் தேவ் பொறுத்த வரை ஒரு நாள் இரண்டு நாள் முன்னதாகவே முடித்த விடுவார். தமிழ் ரசிகர்கள் புதியவர்கள் நடித்தாலும் அதை பார்ப்பார்கள். அதன்பிறகு வாய்மொழி சொல் கேட்டு பார்த்து படத்தை வெற்றி பெற செய்வார்கள். ராம்தேவுக்கும் அவரது குழுவும் எனது வாழ்த்துக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.


மேலும் படிக்க | கோலிவுட் நாயகிகளின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ