பிறப்பில் இருந்து இறப்பு வரை தாயின் அரவணைப்பை தேடுவோர் பலர். தாயாக இருப்பவர்கள், தங்களது குழந்தைகளுக்காக செய்யாத தியாகம் இல்லை. உலக அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, திரையுலகில் தனிப்பட்ட தாயாகவும் நின்று ஜெயித்து வரும் நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“வாடி ராசாத்தி..” ஜோதிகா


சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர், ஜோதிகா. வாலி படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து அப்போதும் இப்போதும் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்ற அனைவருடனும் இணைந்து பல படங்களில் நடித்து விட்டார். நடிகர் சூர்யாவையே காதலித்து 2006ஆம் ஆண்டு கரம் பிடித்த இவர், அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சூர்யா-சோதிகாவிற்கு தியா-தேவ் என்ற இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். இதையடுத்து, சினிமாவில் இருந்து பெரிய ப்ரேக் எடுத்த ஜோதிகா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களில் நல்ல தாயாகவும் நல்ல நடிகையாகவும் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் ஜோ. 


“சஹானா சாரல் தூவுதோ..” ஷ்ரேயா


தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டிற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஜொலித்தவர் ஷ்ரேயா. ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். 2018ஆம் ஆண்டு தனது காதலர் ஆண்ட்ரேவை கரம் பிடித்த ஷ்ரேயா, 2021ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார். இதையடுத்து, சில மாதங்கள் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்துக்கொண்ட இவர், தற்போது தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | Samantha: ‘தனிமை புனிதமானது..’ குஷி படப்பிடிப்பின் போது தனிமையில் இனிமை கண்ட சமந்தா!


“நான் பிழை..நீ மழலை..”நயன்தாரா


கோலிவுட்டில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 16 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற டைட்டிலுடன் உள்ள நயன், தாயாகி உள்ளதாக அனைவருக்கும் சர்ப்ரைஸ் கூறினார். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் மூலம் தங்களது இரட்டை குழந்தைகளான உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தைவான் ஆகியோருக்கு தாயானார் நயன். பலர், நயன்தாராவின் தாய்மை குறித்து குறை கூறினாலும், ஒரு அம்மாவாக தனது குழந்தைகளுக்கு வேண்டியவற்றை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. 



பாலிவுட் பக்கம்:


கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட் திரையுலகிலும் அம்மாவாகவும் நடிகையாகவும் சில நடிகைகள் வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர். 


ஆலியா பட்


ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு கரம் பிடித்த ஆலியா பட், சில மாதங்களிலேயே ராஹா என்ற குழந்தைக்கு தாயானார். இவர், ஒரு பக்கம் சினிமா-தொழில் என பிசியாக இருந்தாலும் ஒரு தனது குழந்தையையும் நன்றாகவே கவனித்து வருகிறார். 


அனுஷ்கா ஷர்மா


கிரிக்கெட்-சினிமா ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, அனுஷ்கா சர்மா-விராட் கோலி. இவரும் ஒரு நடிகையாகவும் தாயாகவும் நன்றாக தனது கடமையை செய்து வருகிறார். இவர்களது குழந்தை வாமிகாவை இன்றுவரை கேமராவின் கண்முன் காட்டாமல் பாசத்துடன் பாதுகாத்து வருகின்றனர், அனுஷ்காவும் கோலியும். 


மேலும் படிக்க | Sunny Leone Birthday: இவருக்கு இப்படியொரு பழக்கமா? சன்னி லியோன் குறித்து யாரும் அறியாத தகவல்கள் சில!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ