Sunny Leone Birthday: இவருக்கு இப்படியொரு பழக்கமா? சன்னி லியோன் குறித்து யாரும் அறியாத தகவல்கள் சில!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் சன்னி லியோனிற்கு பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்து சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா?  

Written by - Yuvashree | Last Updated : May 13, 2023, 11:48 AM IST
  • சன்னி 2011ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்ற திரைப்பட இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.
  • சன்னிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
  • சன்னி லியோன், விளங்குகள் நல ஆர்வலர்
Sunny Leone Birthday: இவருக்கு இப்படியொரு பழக்கமா? சன்னி லியோன் குறித்து யாரும் அறியாத தகவல்கள் சில! title=

இந்தியா மட்டுமன்றி உலகளவில் பல கோடி ரசிகர்களின் மனதை ஆட்கொண்டவர், சன்னி லியோன். பலரும், இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் வரை, இவரை ஒரு பாலியல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகையாக மட்டுமே பார்த்தனர். 

பிக்பாஸ் இல்லத்திற்குள் சன்னி லியோன்:

தமிழை விட இந்தியில் மிகவும் பிரபலமான ஷோ, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். 2011ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நடைப்பெற்றது. இதில், நடிகை சன்னி லியோன் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில், அவர் இடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டிருந்தாலும் வைல்ட் கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்தார். அதுவரை இவரை ஒரு உடம்பாக மட்டும் பார்த்துவந்த இந்த உலகம், அதன் பிறகுதான் இவரின் அழகான மனதை பார்க்கத்தொடங்கியது. 

ஓடி ஓடி உதவும் குணம்..

சன்னி லியோன், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூறப்படுகிறது. இதற்காக இவர், பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளார் எனவும் இவரது நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். செல்ல பிராணிகள் மற்றும் வனவிலங்குகளின் மீதும் அதிக அன்பு கொண்டிருப்பவர் சன்னி. இவர், மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் வருமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் பள்ளிப்படிப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | Samantha: குஷி படப்பிடிப்பில் சமந்தாவை கொஞ்சும் விஜய் தேவரகொண்டா…ரசிகர்கள் மகிழ்ச்சி

உண்மையான பெயர் முதல் தத்தெடுத்த மகள் வரை..

சன்னி லியோனின் உண்மையான பெயர், கரண்ஜித் கவுர் வோஹ்ரா. இவர் கனாடாவில் உள்ள சிக் குடும்பத்தை சேர்ந்தவர். 
இவர், ஆபாச படங்களில் நடிப்பதற்கு முன்னர் செவிலியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு நர்ஸிங் படிப்பு படித்து வந்தாராம்.
தான் இருபாலினத்தினரால் ஈர்க்கப்பட்டவர் (Bi-Sexual) என்பதை தனது பருவ வயதின் போதே உணர்ந்தவர் சன்னி. இதை அவர், தனது சகோதரர் இடத்தில் மட்டும் கூறினாராம்.

  • சன்னி லியோன் இடது கை பழக்கமுடையவர். இவருக்கு இப்படியொரு பழக்கம் உள்ளது என பலருக்கு தெரியாது. 
  • சன்னி 2011ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்ற திரைப்பட இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.
  • சன்னிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையான நிஷா கவுர் சிங்கை 2017ஆம் ஆண்டு தத்தெடுத்துக்கொண்டார் சன்னி. 
  • முதல் குழந்தையையடுத்து நோவா மற்றும் ஆஷர் ஆகிய இரு குழந்தைகளையும் சர்ரகஸி மூலம் பெற்றடுத்தார் சன்னி. 
  • சன்னி லியோன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவரது வகுப்பில் படித்த சிலர் இவரை கேலி செய்வார்களாம். அவர் காலில் அதிக முடி இருந்ததாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இல்லை எனவும் கூறி அவரை கேலி செய்துள்ளனர், அவருடன் பயின்றவர்கள். 

சன்னி லியோனின் கோலிவுட் எண்ட்ரி

பாலிவுட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சன்னி லியோன், 2014ஆம் ஆண்டு தமிழில் வெளியான வடகறி படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடி பலத்த வரவேற்பினை பெற்றார். இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் அழகான பிசாசாகவும் மகாராணியாகவும் நடித்திருந்தார். படம் மொக்கையாக இருந்திருந்தாலும் இவரது பர்ஃபாமன்ஸ் மக்களை பெரிதும் ஈர்த்தது. 

மேலும் படிக்க | Bigg Boss Julie: “ஜூலிக்கு கல்யாணமா?” மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News